For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டத்திற்கு புறம்பான ஆட்சி அசல் ஓட்டுநர் உரிமம் கேட்பது வேடிக்கை.. ஸ்டாலின் கண்டனம்!

வாகன ஓட்டிகள் அசல் லைசென்ஸை வைத்திருப்பது விபத்தை தடுக்காது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : வாகன ஓட்டிகள் அசல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அரசுக்கு எதிரிக்கட்சித் தலைவரும் திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாகன ஓட்டிகள் இன்று முதல் கட்டாயம் அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவர்கள். சட்டத்துக்கு புறம்பான ஆட்சி, அசல் ஓட்டுநர் உரிமம் கேட்பது வேடிக்கையாக உள்ளது.

 M.K.Stalin says that drivers having original license wont control the accidents

ஆளத் தெரியாதவர்கள் கையில் சிக்கிக் கொண்ட அரசின் நிர்வாகத்தில் அலங்கோலம். போக்குவரத்து அலுவலகங்களில் ஊழலை களைய வேண்டும். வாகன விபத்தை குறைக்க ஆக்கப்பூர்வமான வழிகளை அரசு பின்பற்ற வேண்டும். மேலும் தற்போது விதிக்கப்பட்டுள்ள உத்தரவை அரசு திரும்பப் பெற வேண்டும், என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
Opposition leader Stalin says government should withdraw the order of having license while driving is compulsory as people were sufferin because of it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X