For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குமரியை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்... மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்!

கன்னியாகுமரியை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : கன்னியாகுமரியை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது : இந்தியாவின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் ஓகி புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டுள்ளே.ன புயலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன, பெரும்பாலன பகுதிகள் சேதத்தை சந்தித்துள்ளன.

கடலுக்கு சென்று கரை திரும்பாத மீனவர்களின் குடும்பத்தினர் மிபவும் கவலையில் உள்ளனர், அவர்களை மீட்பதற்காக மாநில அரசு செய்யும் முயற்சிகள் மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. மீனவர்கள் காணாமல் போனது குறித்து மீன்வளத்துறை அமைச்சர், முதல்வர், தலைமைச் செயலாளர் மாறுபட்ட கருத்துகளை கூறுகின்றனர். இது மாநில அரசின் செயல்படாத தன்மையை காட்டுகிறது.

எத்தனை மீனவர்கள் என கணக்கில்லை

மாநில தலைமை செயலாளர் முதலில் மத்திய அரசிடம்ன 97 மீனவர்களைக் காணவில்லை என்று சொன்னார். இதன பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் 2124 மீனவர்களை காணவில்லை என்றார். துணை முதல்வர் தன்னுடைய பங்கிற்கு 2384 மீனவர்களை காணவில்லை என்று சொன்னார்.

அமைச்சர்கள், அதிகாரிகளின் இந்த முரண்பட்ட தகவல்கள் கன்னியாகுமரி மாவட்ட மக்களை பீதியடைய வைத்துள்ளது. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முதல்வர் பழனிசாமி வேறொரு எண்ணிக்கையை சொல்கிறார்.

மீனவர்கள் குறிப்பிடும் எண்ணிக்கை

மீனவர்கள் குறிப்பிடும் எண்ணிக்கை

மொத்தத்தில் இந்த அரசு இயற்கை பேரிடரை சரியான முறையில் கையாளவில்லை என்பது மட்டும் தெள்ளத்தெளிவானிறது. புயல் குறித்து வானிலை மையம் எச்சிரக்கை கொடுத்தும் அரசு முறையான முன்எச்சரிக்கை எடுக்கவில்லை. மீனவர்கள் காணாமல் போனது குறித்து தொலைக்காட்சிகளுக்கு நீங்கள் அளித்த பேட்டியை பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டேன். 1000 மீனவர்களை காணவில்லை என்று சொல்வது தவறு என்று தங்களுடைய பேட்டியில் கூறுகிறீர்கள். உங்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் ஆயிரம் மீனவர்களை காணவில்லை என்று சொல்வது கடலுக்கு சென்று கரை திரும்பவில்லை என்று மீனவ சமுதாய மக்கள் குறிப்பிடும் எண்ணிக்கை.

சரியான தகவல் இல்லை

சரியான தகவல் இல்லை

உண்மை நிலவரம் இப்படி இருக்கையில் உங்களது பேட்டி மீனவர்களுக்கு வெந்தப் புண்ணில் விரலைப் பாய்ச்சுவது போல இருக்கிறது. புயலால் கடுமையான பாதிப்பை சந்தித்து இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் இருக்கின்றனர் கன்னியாகுமரி மக்கள். ஆனால் மீனவர்கள் மாயமான விவகாரத்தில் சரியான தகவலைத் தர மத்திய, மாநில அரசுகள் மறுக்கின்றன.

உடனடி நடவடிக்கை வேண்டும்

உடனடி நடவடிக்கை வேண்டும்

எனவே அனைத்து தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி எத்தனை மீனவர்களைக் காணவில்லை என்பதை கண்டறிய வேண்டும். கரை சென்ற குடும்பத்தினரை காணாமல் தவிக்கும் பெண்களின் அழுகுரலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மத்திய பாதுகாப்புத் துறையும், கடற்படையும் இணைந்து காணாமல் போன மீனவர்களை மீட்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரியை மீட்க வேண்டும்

குமரியை மீட்க வேண்டும்

அதோடு, ஓகி பாதித்த கன்னியாகுமரியை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அந்த மாவட்டத்தை மறு கட்டமைக்க தேவையான உடனடி நடவடிக்கைகளை தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி பெற்றுத் தர வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க கன்னியாகுமரியை அழிவில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
M.K.Stalin writes letter to Defence minister Niramala Seetharaman to take steps to rescue the missing fishermen and also urges to declare Kanyakumari as National calamity disaster district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X