For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்காக சொந்த கிராமத்தில் நிலம் கொடுத்த நடராஜன்!

இலங்கைப் போரின் போது இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக தஞ்சாவூர் அருகே அமைக்கப்பட்ட நினைவு முற்றத்திற்கு தனது சொந்த ஊரான விளாரில் நிலத்தை வழங்கியவர் ம. நடராஜன்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் : நடராஜன் கொடுத்த நிலம்

    சென்னை : இலங்கைப் போரின் போது இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக தஞ்சாவூர் அருகே அமைக்கப்பட்ட நினைவு முற்றத்திற்கு தனது சொந்த ஊரான விளாரில் நிலத்தை வழங்கியவர் ம. நடராஜன்.

    30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற ஈழப்போர் 2009-ல் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்தது. இதனையடுத்து இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக, தஞ்சாவூர்- திருச்சி நான்குவழிச் சாலையோரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    இந்த நினைவு முற்றம் கட்டும் பணி நவம்பர் 15, 2010இல் தொடங்கப்பட்டது. வைகோ மற்றும் நல்லக்கண்ணுவால் இதன் அடிக்கல் நாட்டப்பட்டது. முதலில் ஒரு நினைவுத்தூணாக மட்டுமே அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் தமிழர் நினைவிடங்களுக்கு நிகழ்ந்த அவலங்களால், தமிழர்கள் அதிகளவில் அழிக்கப்பட்ட இலங்கையின் உள்நாட்டுப் போரின் நினைவுச் சின்னமாக இது உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டது.

    இலங்கைப் போரை நினைவுபடுத்தும் வகையில்

    இலங்கைப் போரை நினைவுபடுத்தும் வகையில்

    இலங்கையில் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை விளக்கும் வகையில் முழுவதும் கருங்கற்கள் கொண்டு வடிக்கப்பட்ட சிற்பங்கள், போரை நிறுத்த வலியுறுத்தி உலகத்தின் பல பகுதிகளில் தீக்குளித்து உயிரிழந்த தமிழர்களின் சிற்பங்கள், ஓவியங்கள், தமிழுக்குத் தொண்டு செய்தவர்களின் அரிய புகைப்படங்களைக் கொண்டு இந்த நினைவு முற்றம் உருவாக்கப்பட்டது.

    பழ. நெடுமாறன் முன் எடுத்த முயற்சி

    பழ. நெடுமாறன் முன் எடுத்த முயற்சி

    உலகத் தமிழர் பேரவையால் மேற்கொள்ளப்பட்ட இத் திட்டப்பணி, பேரவை மற்றும் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ நெடுமாறனின் மேற்பார்வையில் நடந்தது. பழ. நெடுமாறனுடன் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைப்பதற்கு முழு துணையாக இருந்தவர் நடராஜன்.

    விளார் கிராமத்து நிலத்தை வழங்கியவர்

    விளார் கிராமத்து நிலத்தை வழங்கியவர்

    கட்டுமானத்திற்கான நிதி பல இடங்களிலிருந்து திரட்டப்பட்டது. தமிழ் செயற்பாட்டாளர் எம். நடராஜன் நினைவு முற்றத்திற்குத் தேவையான நிலத்தை தனது சொந்த ஊரான விளார் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய இடத்தை வழங்கினார். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்காக நடராஜன் தனக்கு சொந்தமான ரோலக்ஸ் வாட்ச், நிசான் கார், என்டோவர் கார், சொனாட்டா கார் ஆகியவற்றை மேடையில் ரூ. 45 லட்சத்திற்கு விற்பனை செய்து, அந்த பணத்தை பழ.நெடுமாறனிடம் வழங்கப்பட்டது.

    முன்கூட்டியே திறப்பு

    முன்கூட்டியே திறப்பு

    முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை திறப்பதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் 2013 ஆம் ஆண்டு, நவம்பர் 8 ஆம் தேதிக்கு திறப்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் முன்கூட்டியே நவம்பர் 6ம் தேதியே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறந்து வைக்கப்பட்டது.

    சசிகலாவிற்கு கட்டுப்படுவேன் என சொன்ன நடராஜன்

    சசிகலாவிற்கு கட்டுப்படுவேன் என சொன்ன நடராஜன்

    இந்த விழாவுக்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ணமோகன்ஜி வந்திருந்தார். நிகழ்ச்சியின் போது பேசிய ம. நடராஜன் இது போல், இந்தியா முழுவதும் உள்ள என் நண்பர்களை அழைத்தால் தாங்க மாட்டார்கள்; இனிமேல் அனைவரையும் அழைப்பேன். இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். ஒன்று பழ.நெடுமாறனுக்கு கட்டுப்படுவேன்; இரண்டாவது என் மனைவிக்கு கட்டுப்படுவேன் என்று கூறி இருந்தார்.

    English summary
    Sasikala's husband M.Natarajan given place to built Mullivaikkal memorial at his native Vilar in Thanjavur district, and also given Rs.45 lakhs after selling his car in the stage.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X