For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: 18 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு!

தினகரன் ஆதரவு 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதி சுந்தரோ, எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பளித்தார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளதால் 3-வது நீதிபதி பெஞ்சுக்கு இவ்வழக்கின் தீர்ப்பு மாற்றப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்:

Madras HC to deliver verdict on 18 AIADMK MLAs Disqualification case on today Live Updates

Newest First Oldest First
3:43 PM, 14 Jun

நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பால் தகுதி நீக்க உத்தரவை நிறுத்தி வைக்க முடியும்

தினகரன் தரப்புக்கு தமிழக அரசின் முன்னாள் தலைமை வக்கீல் சுப்பிரமணியன் யோசனை

சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவை நிறுத்தி வைக்க சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம்

நீதிபதி சுந்தரின் தீர்ப்பை முன்வைத்து உச்சநீதிமன்றத்தை அணுகலாம்

சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவை உச்சநீதிமன்றம் நிச்சயம் நிறுத்தி வைக்கும்- சுப்பிரமணியன்

2:34 PM, 14 Jun

3-வது நீதிபதியை சீனியர் நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிப்பார்
2:16 PM, 14 Jun

18 எம் எல் ஏ.,க்களும் எங்களுடனே இருக்கிறார்கள்: டி.டி.வி தினகரன் பேட்டி

கட்சியைக் காப்பாற்ற தங்களது பதவியை தியாகம் செய்தவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்: டி.டி.வி தினகரன்

வெற்றிவேலும், தங்க தமிழ்செல்வனும் எனக்கு இரு கண்கள்: டி.டி.வி தினகரன்

இந்த தீர்ப்பை எதிர்த்துப் போராடுவோம் ; நாங்கள் அனைவரும் போராளிகள்: டி.டி.வி தினகரன்

1:46 PM, 14 Jun

தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் வரை தேர்தல் நடத்தக்கூடாது - ஹைகோர்ட்
1:45 PM, 14 Jun

3-வது நீதிபதியின் கருத்தை கேட்க இரண்டு நீதிபதிகளும் முடிவு
1:45 PM, 14 Jun

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு- 2 உயர் நீதிமன்ற நீதிபதிகளும் மாறுபட்ட கருத்து
1:43 PM, 14 Jun

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என இன்னொரு நீதிபதி சுந்தர் உத்தரவு
1:42 PM, 14 Jun

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்தது செல்லும்- ஹைகோர்ட்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்- உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா தீர்ப்பு

அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு

1:37 PM, 14 Jun

18 எம் எல் ஏ.,க்கள் வழக்கின் தீர்ப்பு நியாயப்படி பார்த்தால், அரசுக்கு எதிராகவே இருக்கும்: சீமான்
1:29 PM, 14 Jun

தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வாசிக்க தொடங்கினர்
1:28 PM, 14 Jun

6-வது வழக்கில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சுந்தர் பெஞ்ச் தீர்ப்பு வாசிப்பு
1:25 PM, 14 Jun

5-வது வழக்கின் விசாரணையை தொடங்கியது நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சுந்தர் பெஞ்ச்
1:22 PM, 14 Jun

தற்போது 4-வது வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது
1:16 PM, 14 Jun

தீர்ப்பை வழங்க நீதிபதிகள் அறைக்கு வருகை தந்தனர்
1:14 PM, 14 Jun

தீர்ப்பு வழங்க தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் வருகை
1:14 PM, 14 Jun

வழக்கின் தீர்ப்புக்காக தலைமை செயலகத்தில் முதல்வர் உள்ளிட்டோர் காத்திருப்பு
1:14 PM, 14 Jun

தினகரன் இல்லத்தில் ஏராளமான அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு
1:13 PM, 14 Jun

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் பெஞ்ச்சில் 7-வது வழக்காக எடுக்கப்படுகிறது
1:11 PM, 14 Jun

மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினரும் விசாரணை அறை அருகே குவிப்பு
1:10 PM, 14 Jun

நீதிமன்ற அறையில் சட்டக் கல்லூரி மாணவர்கள், இளம் வழக்கறிஞர்கள் குவிந்தனர்
1:05 PM, 14 Jun

வழக்கறிஞர்கள் குவிந்ததால் விசாரணை அறை நிரம்பி வழிகிறது
1:05 PM, 14 Jun

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை கேட்க வழக்கறிஞர்கள் குவிந்தனர்

நீதிபதிகள் இருவரும் தனித்தனியே தீர்ப்பை வாசிக்க உள்ளனர்

12:47 PM, 14 Jun

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வரும் நிலையில் ஆலோசனை

சட்டசபை வளாகத்தில் தலைமை வழக்கறிஞருடன் முதல்வர் ஆலோசனை

11:29 AM, 14 Jun

இடைத் தேர்தல்களை சந்திக்க 100% தயாராக உள்ளோம்: தங்க தமிழ்ச்செல்வன்
11:26 AM, 14 Jun

கட்சித் தாவல் தடை சட்டம் எங்கள் மீது பாயாது- தங்க தமிழ்ச்செல்வன்

கொறடா உத்தரவை மீறியது ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள்தான்

நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரவேண்டும்- தங்க தமிழ்ச்செல்வன்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என்றே தீர்ப்பு வர வேண்டும்

தீர்ப்பு சாதகமாக வராவிட்டால் மேல்முறையீடு செய்யமாட்டேன்: தங்க தமிழ்ச்செல்வன்

சென்னையில் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

11:14 AM, 14 Jun

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நல்லதே நடக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்

முதல்வர் மீது ஸ்டாலின் கொடுத்த ஊழல் புகாரில் முகாந்திரம் உள்ளதா?- ஜெயக்குமார்

10:14 AM, 14 Jun

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களுக்கு அதிமுக திடீர் அழைப்பா?

அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் கருணை கவிதை வெளியீடு

9:15 AM, 14 Jun

18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் இன்று தீர்ப்பு வர இருக்கிறது

வழக்கின் தீர்ப்பு அணுகுண்டாகவும் வெடிக்கலாம், புஸ்வாணமாகவும் மாறலாம்: தமிழிசை

மத்தியில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுவதால் பாஜக தலை நிமிர்ந்து நிற்கிறது: தமிழிசை

9:04 AM, 14 Jun

18 எம்எல்ஏக்கள் தகுதி நீ்க்க வழக்கு தீர்ப்பு- அமைச்சர்களுடன் முதல்வர் பழனிச்சாமி அவசர ஆலோசனை
8:32 AM, 14 Jun

18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு இன்று வெளியாவதன் எதிரொலி

ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனைக்கு அழைப்பு

READ MORE

English summary
The Madras High Court will deliver the verdict on the disqualification of 18 AIADMK MLAs by TN Speaker Dhanapal on Today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X