For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போக்குவரத்து ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யக் கூடாது... ஹைகோர்ட் 'கறார்'

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யக் கூடாது என்று அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக அரசு போக்குவரத்து நஷ்டத்தில் இயங்க என்ன காரணம் ? போராட்டம் எதனால் ?- வீடியோ

    சென்னை : போக்குவரத்து ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யக் கூடாது என்று தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை நீதிபதி மணிக்குமார் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கில் தொழிற்சங்கங்களின் பதில் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த ரூ. 5ஆயிரம் கோடியை அரசு வழங்காததே வேலைநிறுத்தத்திற்குக் காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

    Madras HC directs government not to dismiss transport employees

    அதற்கு நிலுவைத் தொகையை வழங்குவதில் சிறு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், நிலுவைத் தொகை வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் பதில் கூறப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்திருந்தது, இந்நிலையில் இந்த தீர்ப்பில் திருத்தம் செய்து நோட்டீஸ் அளித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யக் கூடாது என்று அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், ஏற்கனவே ஓய்வூதிய நிலுவைத் தொகை தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நீதிபதி மணிக்குமார் அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    English summary
    Madras HC directs government not to dismiss transport employees, and also transfers the case to 3rd bench headed by Justice Manikumar, who is hearing the employees arrears pending case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X