For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்ப ஹைகோர்ட் உத்தரவு!

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான சம்மனுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான அமலாக்கத்துறையின் சம்மனுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. அமலாக்கத்துறை அளிக்கும் புதிய சம்மன் தேதியில் நளினி சிதம்பரம் நேரில் ஆஜராகவும் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிறுவனத்திடம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும் மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் வக்கீல் கட்டணமாக ரூ. 1 கோடி பெற்றது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு ஆஜராக நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

Madras HC quashes Nalini chidambaram petition to reject the summon by ED on Saradha chit scam

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சாரதா நிதிநிறுவன மோசடி மூலமாக கிடைத்த தொகையில் இருந்தே நளினி சிதம்பரம் பெரும் தொகையை வழக்கறிஞர் கட்டணமாக பெற்றுள்ளதாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடையை நீக்கக் கோரி அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் சம்மன் மீதான தடையை நீக்கக் கூடாது என்றும் வாதிட்டார்.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சாரதா நிதிநிறுவன மோசடி மூலமாக கிடைத்த தொகையில் இருந்தே நளினி சிதம்பரம் பெரும் தொகையை வழக்கறிஞர் கட்டணமாக பெற்றுள்ளதாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஏற்கனவே அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி நளினி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். நளினி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை புதிய சம்மனை அனுப்ப வேண்டும் என்றும், அந்த தேதியில் நளினி சிதம்பரம் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
Madras HC quashes Nalini chidambaram petition to reject the summon by ED on Saradha chit scam and ordered ED to send fresh summon to her to appear.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X