For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி பிறப்பித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மெரினாவில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு- வீடியோ

    சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி பிறப்பித்துள்ளது.

    சென்னை மெரினாவில் இரண்டு வருடம் முன் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் உலகம் முழுக்க பெரிய அளவில் வைரலானது. இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தீர்ப்பும் கிடைத்தது.

     Madras High court upholds TN state government decision to prohibit protests at Marina

    இந்த நிலையில் மெரினாவில் அதன்பின் தொடர்ச்சியாக போராட்டம் நடக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் தமிழக அரசு இது எதற்கும் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் மெரினாவில் போராட்டம் நடத்த கூடாது என்று தடை விதித்தது.

    ஆனால் இதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கின் முடிவில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

    அதன்படி காவிரி பிரச்சனைக்காக மெரினாவில் போராட அய்யாகண்ணுவிற்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    தமிழக அரசு மூலம் தொடரப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. அதன்படி மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி பிறப்பித்துள்ளது.

    அதில், மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை. மெரினாவில் போராட்டம் நடத்த தனி நீதிபதி அளித்த அனுமதியை ஏற்க முடியாது. மெரீனாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.

    தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்களை அதிகாரிகள் ஒழுங்குப்படுத்த வேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட அரசு எடுத்த நடவடிக்கை சரியே என்று கூறப்பட்டுள்ளது.

    English summary
    Madras High court upholds TN state government decision to prohibit protests at marina beach.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X