For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட் தேர்வில் பிறமொழிக் கேள்விகளை மொழிபெயர்க்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி!

நீட் தேர்வில் பிறமொழி கேள்விகளை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வில் பிறமொழி கேள்விகளை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதுக்கோட்டையை சேர்ந்த மாணவி ஜெரோபா என்பவர் நீட் தேர்வு தொடர்பாக ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் ஆங்கில மொழி வினாத்தாள் தவிர குஜராத்தி, இந்தி, மராத்தியில் மொழியில் வினாத்தாள் எளிமையாக இருந்தததாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

 Madras Highcourt's Madurai bench ordered to translate other language question papers

இதனால் மே மாதம் 7ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் தர வரிசை சீராக இருக்காது என்பதால் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி அங்கீகரிக்கப்பட்ட மொழிப்பெயர்ப்பாளர் மூலம் குஜராத்தி,இந்தி,மராத்தி வினாத்தாளை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

 Madras Highcourt's Madurai bench ordered to translate other language question papers

மேலும் இந்த மொழிபெயர்க்கப்பட்ட வினாத்தாளை மத்திய, மாநில அரசுகளிடம் அளித்து அவர்களின் கருத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து வழக்கு விசாரணை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த சக்தி மலர்கொடி என்பவர் கடந்த 24ம் தேதி நீட் தேர்வு முடிவுக்கு தடை கோரி தொடர்ந்த வழக்கில் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கும் ஜூன்12ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Chennai Highcourt's Madurai bench ordered to translate Gujarathi, Hindi and Marathi question papers into Tamil and submit the report on 12th of June
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X