For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நித்யானந்தாவால் உயிருக்கு ஆபத்து: மதுரை ஆதினம் நீதிமன்றத்தில் திடீர் மனு!

By Siva
Google Oneindia Tamil News

மதுரை: நித்யானந்தாவால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது, நித்யானந்தாவை நீதிமன்றம் தண்டிக்க வேண்டும்.என்று மதுரை ஆதினம் அருணகிரிநாதர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதில் மனுதாக்கல் செய்துள்ளார்.

மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக கடந்த 2012ஆம் ஆண்டு நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த மணிவாசகம், கும்பகோணம் தியாகராஜன் ஆகியோர் மதுரை 1-வது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதுரை ஆதீனம் (அருணகிரிநாதர்), நித்யானந்தா ஆகியோர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

நித்தி நீக்கம்

நித்தி நீக்கம்

இந்த வழக்குகள் நிலுவையில் இருந்தபோது மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்யானந்தாவை நீக்கி விட்டதாக மதுரை ஆதீனம் அறிவித்தார். மேலும் இதுதொடர்பான வழக்கை தொடர தனக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நித்யானந்தா மனுதாக்கல்

நித்யானந்தா மனுதாக்கல்

இந்த வழக்கின் விசாரணையின் போது நித்யானந்தா தன்னை மதுரை ஆதீனமடத்தின் 293-வது மடாதிபதியாக குறிப்பிட்டு ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

வழக்கை சந்திப்பேன்

வழக்கை சந்திப்பேன்

அதில், ‘‘எனக்கும், அருணகிரிநாதருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் தனித்தனியாக வழக்கை சந்தித்து வருகிறோம். வழக்கில் நான் பாதிக்கப்பட்டவன். எனவே வழக்கை தொடர்ந்து நடத்த விரும்புகிறேன். எனவே இந்த வழக்கில் அருணகிரிநாதரை 3-வது எதிர்மனுதாரராக சேர்த்து, வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

மதுரை ஆதினம் பதில்

மதுரை ஆதினம் பதில்

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி இளவழகன் முன்னிலையில் திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

தம்பிரான் அல்ல

தம்பிரான் அல்ல

தம்பிரானாக பணிபுரிபவரின் அடுத்த பதவி தான் இளைய ஆதீனம். தம்பிரானை இளைய ஆதீனமாக உயர்த்த பல்வேறு நடைமுறைகள் உள்ளன. நித்யானந்தா தம்பிரான் அல்ல. அவர் மதுரை ஆதீனத்தின் பக்தர் அல்ல. நித்யானந்தா என்னிடம் ஆசி பெறவும், திருஞானசம்பந்தர் பற்றி தெரிந்து கொள்ளவும் தான் மடத்துக்கு வந்தார்.

நித்தி உறுதி

நித்தி உறுதி

பிடதி ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டே, மதுரை ஆதீன மடத்தில் பக்தராக இருக்க வேண்டும் என்று நித்யானந்தா நினைத்தார். ஒருவர் இரு வேறு தத்துவங்களை கொண்ட மடத்தின் சீடராக இருக்க முடியாது என அறிவுறுத்தினேன். ஆனால் நித்யானந்தா படிப்படியாக சைவ சித்தாந்தத்திற்கு மாறுவதாகவும், படிப்படியாக தியான பீடத்திலிருந்து வெளியேறுவதாகவும் கூறினார்.

ஆதினத்திற்கு எதிரான செயல்பாடு

ஆதினத்திற்கு எதிரான செயல்பாடு

அதன்படி அவர், மடத்தில் எனது கண்காணிப்பில் இருந்தார். இங்கு தங்கியிருந்த சில நாட்களில் பாரம்பரியமான மதுரை ஆதீனத்தின் பெயரை கெடுக்க முயன்றார். ஆதீன தத்துவத்துக்கு எதிராக செயல்பட்டார். இயற்கைக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

கடவுளாக அறிவிப்பு

கடவுளாக அறிவிப்பு

மடத்தில் தங்காதது, ஆதீனத்தின் அனுமதியின்றி வெளியே சென்றது, தலையை மொட்டையடிக்காதது போன்ற காரியங்களை உற்று கவனித்து வந்தேன். அவரது நடவடிக்கைகள் ஆதீனத்திற்கு இணையாகவும், அதைவிட மேலானதாகவும் இருந்தன. ஆதீனத்திற்கு இணையாக உட்கார்ந்தார். அவர் தன்னை கடவுளாக கூறிக்கொண்டு மடத்தில் பூஜைகள் நடைபெறுவதை வெறுத்தார்.

வெளியேற்றம்

வெளியேற்றம்

தன்னைத்தானே 293-வது ஆதீனமாக அறிவிக்கத் தொடங்கினார். இந்த சூழலில் நித்யானந்தா மீது பல்வேறு பாலியல் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. நித்யானந்தாவின் ஒழுக்கமற்ற, சட்ட விரோத காரியங்களை பார்த்த பின்னர் கண்காணிப்பிலிருந்து என்னை விலக்கிக்கொண்டேன். பின்னர் கடந்த 19-10-2012 அன்று அவரை மடத்திலிருந்து வெளியேற்றினேன்.

போலி கையெழுத்து

போலி கையெழுத்து

அவர் மடத்தில் தங்கி இருந்த குறைவான நாட்களிலேயே ஆதீனத்தின் பெயரை பயன்படுத்தி பல குற்றச்செயல்களில் ஈடுபட்டார், ஆதீனத்தின் கையெழுத்தை போலியாக போட்டார். அடுத்த மடாதிபதியாக நியமனம் செய்யப்பட்டதாக போலி ஆவணங்களை தயாரித்தார்.

சட்டவிரோத மோசடி

சட்டவிரோத மோசடி

தவறான எண்ணத்துடன் அறக்கட்டளை ஆவணம் ஒன்றையும் உருவாக்கி கையெழுத்து வாங்கினார். நித்யானந்தாவை குருட்டுத் தனமாக நம்பிவிட்டேன். ஆவணங்களில் திருட்டுத்தனமாகவும், சட்டவிரோதமாகவும் மோசடி செய்து நித்யானந்தா என்னிடம் கையெழுத்து வாங்கினார். அந்த ஆவணங்கள் ஆதீனத்தை கட்டுப்படுத்தாது.

அவர் ஆதீனம் அல்ல

அவர் ஆதீனம் அல்ல

அவர் மதுரை ஆதீன மடத்தின் பெருமையை சீரழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். நித்யானந்தா ஒரு மாதம் கூட மடத்தில் தங்கவில்லை. சமய சடங்குகளை செய்யவில்லை. தீட்சையும் பெறவில்லை. தன்னை மதுரை ஆதீன மடத்தின் அடுத்த மடாதிபதியாக அவர் அறிவித்தது செல்லாது. அவர் பலனடையும் விதத்தில் நீதிமன்றம் உத்தரவிடக் கூடாது.

கொலைமிரட்டல்

கொலைமிரட்டல்

அறக்கட்டளை ஒப்பந்தத்தில் நித்யானந்தாவின் ஆட்கள் மிரட்டி கையெழுத்து பெற்றனர். எனவே நித்யானந்தாவை நீதிமன்றம் தண்டிக்க வேண்டும். எனது உயிருக்கு நித்யானந்தாவால் ஆபத்து உள்ளது. இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன். அந்த விசாரணை நிலுவையில் உள்ளது.

ஏப்ரல் 1ல் விசாரணை

ஏப்ரல் 1ல் விசாரணை

நித்யானந்தாவும் இளைய ஆதீனமாக இல்லை என அவரது இணையதளத்தில் தெரிவித்துள்ளார். எனவே, இந்த வழக்கை விசாரிக்கத் தேவையில்லை. தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

English summary
Madurai Aadheenam Arunagirinathar has filed a petition in Madurai bench of Madras high court on Monday said that he has recieved death threat from godman Nithyananda for the last few days
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X