For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாபமும் கோபமும்தான் மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்துக்கு காரணம்- மதுரை ஆதினம்

சாபமும், கோபமும்தான் மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்துக்கு காரணம் என்று மதிரை ஆதினம் தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மதுரை: ஞானிகளின் சாபமும் சிவன் பார்வதியின் கோபமும்தான் மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்துக்கு காரணம் என்று மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று இரவு தீவிபத்து நடைபெற்றது. அங்குள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்து, அப்படியே பரவி அங்குள்ள மற்ற கடைகளுக்கும் பரவியது.

Madurai Aathinam says about Madurai Meenakshi Amman temple fire incident

இதனால் 50 கடைகள் எரிந்து நாசமாகின. இந்த தீவிபத்தின் வெப்ப தாக்கத்தால் மாடங்களில் இருந்த புறாக்கள் செத்து மடிந்தன. இது முழுக்க முழுக்க அபசகுனமாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜோதிடர்களும் இது ஆரோக்கியமான சூழல் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மதுரை ஆதின்ம கூறுகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்துக்கு சிவன் - பார்வதியின் கோபமும், ஞானிகளின் சாபமும் காரணம்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும். எதற்கும் பணம் என்ற நிலையை இனியாவது கோயில் நிர்வாகம் மாற்றி தரிசன கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

English summary
Madurai Aathinam says that fire accident happens in Madurai Meenakshi Amman temple because of curse and angry of Lord Shiva and Parvati.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X