For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்த விஜயேந்திரருக்கு மதுரை ஆதீனம், தமிழருவி மணியன் கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்த விஜயேந்திரருக்கு தொடர் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும் போது அதற்கு எழுந்து நின்று மரியாதை செய்யாமல் அமர்ந்து இருந்த காஞ்சி விஜயேந்திரருக்கு மதுரை ஆதீனம், தமிழருவி மணியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

சென்னையில் தமிழ் சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழா தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்படும் போது கவர்னர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நிற்க விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மட்டும் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

 சமூக வலைத்தளங்களில் கண்டனம்

சமூக வலைத்தளங்களில் கண்டனம்

விழா நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றவர்களுடன் சேர்ந்து எழுந்து நின்று மரியாதை செய்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மதுரை ஆதீனம் மற்றும் காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் இதுதொடர்பாக கருத்து தெரிவித்து உள்ளனர்.

 தமிழகத்தில் தான் காஞ்சி மடம்

தமிழகத்தில் தான் காஞ்சி மடம்

இதுகுறித்து மதுரை ஆதீனம் கூறும்போதும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அதற்குரிய மரியாதையை செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் காஞ்சி மடாதிபதி இளைய பீடாதிபதிக்கும் உண்டு. அவ்வாறு எழாமல் அமர்ந்திருந்தது அவருக்கு சிறுமை சேர்த்திருக்கிறது. இது சரியான முன்னுதாரணம் அல்ல. தமிழ்நாட்டில்தான் காஞ்சி சங்கரமடம் உள்ளது என்பதை விஜயேந்திரர் நினைவில் கொள்ள வேண்டும்.

 தமிழகத்தில் தான் காஞ்சி மடம்

தமிழகத்தில் தான் காஞ்சி மடம்

இதுகுறித்து மதுரை ஆதீனம் கூறும்போதும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அதற்குரிய மரியாதையை செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் காஞ்சி மடாதிபதி இளைய பீடாதிபதிக்கும் உண்டு. அவ்வாறு எழாமல் அமர்ந்திருந்தது அவருக்கு சிறுமை சேர்த்திருக்கிறது. இது சரியான முன்னுதாரணம் அல்ல.தமிழ்நாட்டில்தான் காஞ்சி சங்கரமடம் உள்ளது என்பதை விஜயேந்திரர் நினைவில் கொள்ள வேண்டும்.

 இனி இப்படி நடக்கக்கூடாது

இனி இப்படி நடக்கக்கூடாது

தமிழ் மக்களின் பெருமைகளை சொல்லக்கூடிய மாண்புமிகு நிலைப்பாடுதான் தமிழ்த்தாய் வாழ்த்து. அதை உணர்ந்து இனிவரும் காலங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலையை தவிர்த்து தமிழுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இப்போது நடந்துவிட்ட இத்தகைய சூழல் சமய துறையில் இனிமேல் வரக் கூடாது என்று நாங்கள் கருதுகிறோம் என்று ஆதீனம் தெரிவித்து உள்ளார்.

 காஞ்சி மடத்திற்கு இது புதிதல்ல

காஞ்சி மடத்திற்கு இது புதிதல்ல

காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் பேசுகையில், இப்போது மட்டுமல்ல. பொதுவாகவே காஞ்சி மடம் தமிழுக்கு எதிராகவே செயல்படக்கூடிய மடம் என்பதில் ஐயமே இல்லை. இவர்களுக்கு வடமொழி தான் உயர்ந்தது. தமிழ் மொழி தாழ்ந்தது என்று நினைத்தாலும் இவர்களுக்கு ஒரு மேடை மரபு ஒன்று இருக்கிறது என்பது நினைவில் வந்தாக வேண்டும். மேடையில் இருக்க கூடியவர் ஏற்க மறுத்தாலும் விருப்பு வெறுப்புகளை கடந்து மேடை நாகரீகம் கருதியாவது எழுந்து நின்றிருக்க வேண்டும். அப்படி எழாமல் போனது தமிழை எந்த அளவுக்கு காஞ்சிமடம் புறக்கணிக்கிறது என்பதை தான் விளக்குகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

English summary
Madurai Adheenam and Tamilaruvi Maniyan on Tamil Thai Vazhthu issue. Earlier A video of the Kanchi Shankaracharya sitting, while the governor and other dignitaries stood up for the Tamil Thai Vazhthu has gone viral on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X