For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குண்டர் சட்டத்தில் திருமுருகன் காந்தி கைது.. ஐ.நா குழுவிற்கு ஹென்றி திபேன் கடிதம்!

திருமுருகன்காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டம் சட்டவிரோதமானது என ஜ.நா குழுவிற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

மதுரை : மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் இலங்கைப் போரின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நினைவேந்தல் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அனுமதியின்றி மெரினாவில் போராட்டம் நடத்தியதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 29ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் இடைக்கப்பட்ட அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இது குறித்து மதுரையில் மனித உரிமைகள் குழுவினர் ஆலோசனை நடத்தினர். பின்னர் சமூக செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் செய்தியாளர்களை சந்தித்தார்.

 உள்நோக்கத்துடன் கைது

உள்நோக்கத்துடன் கைது

அப்போது உள்நோக்கத்துடனே 4 பேரும் கடந்த 29ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குண்டர் சட்டம் முன்கூட்டியே மாநில அரசால் திட்டமிடப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

 அனுமதி தேவையில்லை

அனுமதி தேவையில்லை

மனித உரிமைகளை காக்கும் பொருட்டு அமைதியான வழியில் நடக்கும் போராட்டத்திற்கு யாரிடமும் அனுமதிபெறத் தேவையில்லை. தேவையெனில் மற்றவர்களையும், பங்கேற்பாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று தான் முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும். ஆனால் இங்கு அமைதியான வழியில் போராடியவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். பொது நிகழ்ச்சிகள் அமைதியாக நிகழ்ச்சி நடத்த தடை போட முடியாது என்பதோடு ஒன்றுகூடல் கூட்டத்திற்கு இது எதிரானது.

 அஞ்சமாட்டோம்

அஞ்சமாட்டோம்

திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள வழக்கு மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் போராடுபவர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை. இதற்கெல்லாம் அஞ்சி நாங்கள் எங்கள் போராடும் உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழகத்தில் பொறுப்பில் இருக்கும் அரசு திருமுருகன் காந்திக்கு எதிராக போட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

 ஜ.நாவிற்கு கடிதம்

ஜ.நாவிற்கு கடிதம்

இதையும் மீறிமனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது வழக்குகள் போடுவது தொடருமானால் தன் மீது வழக்கு போடட்டும் என்று திபேன் தெரிவித்தார்.
மேலும் திருமுருகன்காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது சட்டத்திற்கு புறம்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஐ.நா குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் திபேன் கூறினார்.

English summary
Madurai based Human rights activists Henry diphen seeks rejection of Goondas act imposed on ThirumurugaGandhi and 3 others
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X