For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பலத்த மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மற்றும் நெல்லை ஆகிய 5 மாவட்டங்களின் மலையோர பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Newest First Oldest First
6:15 PM, 14 Aug

தமிழகம் முழுவதும் பரவலாக மழை

சென்னை, புறநகர்களில் விட்டு விட்டு மழை பெய்கிறது

கன்னியாகுமரியில் பரவலாக கன மழை பெய்கிறது

காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் மழை பெய்கிறது

4:31 PM, 14 Aug

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு மிக கனத்த மழை எச்சரிக்கை

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

3:20 PM, 14 Aug

சென்னை நகரில் பல இடங்களில் மழை

புறநகர்களில் காற்றுடன் வானம் இருட்டிக் கொண்டு வருகிறது

மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது

பள்ளி விடும் நேரத்தில் மழை பெய்வதால் மாணவர்களுக்குப் பாதிப்பு

3:16 PM, 14 Aug

மதுரையைக் கலக்கும் அழகிரி ஆதரவாளர்களின் போஸ்டர்கள்

கலைஞர் திமுகவின் பொதுச் செயலாளர் என அழகிரியை குறிப்பிட்டு போஸ்டர்கள்

தென் மாவட்ட திமுகவில் மீண்டும் பரபரப்பு

புதிய கட்சி தொடங்கும் எண்ணத்தில் உள்ளாரா அழகிரி?

1:53 PM, 14 Aug

இங்கிலாந்து நாடாளுமன்றம் மீது கார் மோதல்

வேகமாக வந்த கார் தடுப்புச் சுவர் மீது மோதியது

1:33 PM, 14 Aug

பெரம்பலூர் அருகே பள்ளி ஆசிரியை குத்திக் கொலை

காதலனின் வெறிச்செயலால் பரபரப்பு

குன்னம் என்ற ஊரில் கத்திக்குத்து

டூவீலரில் வந்த ஆசிரியையை வழிமறித்து குத்திக் கொன்றார் காதலன்

1:33 PM, 14 Aug

கேரளாவில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து

ரத்து செய்து கேரள அமைச்சரவை முடிவு

பெருமழை, வெள்ளத்தால் கேரளாவில் வரலாறு காணாத பாதிப்பு

மக்கள் துயரில் மூழ்கியுள்ள நிலையில் ஓணம் கொண்டாடுவது பொருத்தமற்றது - பினராயி விஜயன்

12:57 PM, 14 Aug

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது சரியே- அரசு கொறடா தரப்பு வாதம்

ஹைகோர்ட் 3வது நீதிபதி முன்னிலையில் வாதம் நடைபெற்றது

சபாநாயகர் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், கொறடா தரப்பு வாதம்

வழக்கு நாளை மறுநாளுக்கு ஒத்தி வைப்பு

நாளை மறுநாள் முதல் மீண்டும் அனைத்து தரப்பும் வாதத்தை விளக்க உள்ளனர்

12:42 PM, 14 Aug

தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்திருக்காவிட்டால், கலைஞர் பக்கத்தில் என்னை புதைத்திருக்கும் சூழல் வந்திருக்கும்

அந்த சூழ்நிலை எனக்கு வரவில்லை- மு.க.ஸ்டாலின் உருக்கம்

12:41 PM, 14 Aug

திமுக வழக்கறிஞர் குழுவிற்குதான் தீர்ப்பின் பெருமை சேரும்- ஸ்டாலின்
12:39 PM, 14 Aug

கருணாநிதி மறைந்த செய்தி மாலையில் டாக்டர்களால் தெரிவிக்கப்பட்டது

இதையடுத்து, முறைப்படி கடிதம் எழுதி இடம் கேட்டோம், அதையும் அரசு மறுத்துவிட்டது

12:38 PM, 14 Aug

வெட்கத்தை விட்டு சொல்கிறேன், முதல்வரின் கையை பிடித்து கருணாநிதிக்கு இடம் கேட்டேன்-ஸ்டாலின்
12:38 PM, 14 Aug

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைப்பது தடைபட்டது எப்படி? ஸ்டாலின் விளக்கம்

திமுக ஆட்சியை கருணாநிதி இருக்கும்போதே மலரச் செய்ய வேண்டும் என நினைத்தேன்

எனது உறுதிமொழியை நிறைவேற்ற முடியாத தவிப்பில் உள்ளேன்-ஸ்டாலின்

அண்ணா அருகே தன்னை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பது கருணாநிதி விருப்பம்

கருணாநிதி உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவர்கள் அதை எங்களிடம் கூறினர்

12:38 PM, 14 Aug

முடிந்த அளவு போராடிவிட்டோம், காப்பாற்றவே வழியில்லை என டாக்டர்கள் கூறினர்

தலைவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நண்பர்கள் மூலமாக அரசுக்கு செய்தி அனுப்பினோம்

கருணாநிதி ஆசையை நிறைவேற்ற முடியாது என்ற நிலையில்தான் எங்களுக்கு செய்தி வந்தது

நேரடியாக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைப்போம் என்று கழக முன்னோடிகள் என்னிடம் கூறினர்

சிலர் நான் நேரில் வர வேண்டாம் என கூறினர்

மானம், மரியாதை எதுபோனாலும் நான் வந்தே தீீருவேன் என்று தெரிவித்தேன்-ஸ்டாலின் உருக்கம்

12:32 PM, 14 Aug

கருணாநிதி இல்லாமல் செயற்குழு கூட்டம் நடப்பதை நினைத்து பார்க்க முடியவில்லை

நீங்கலெல்லாம் தலைவரை மட்டும் இழந்தீர்கள், நான் தந்தையையும் இழந்துள்ளேன்-ஸ்டாலின்

தழுதழுத்த குரலில் செயற்குழுவில் உரையாற்றி வருகிறார் மு.க.ஸ்டாலின்

12:29 PM, 14 Aug

திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் உரை

முன்னணி தலைவர்கள் பேசி முடித்த நிலையில் ஸ்டாலின் நிறைவுரை

12:07 PM, 14 Aug

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம்

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து

உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சி.டி. செல்வம், பஷீர் அகமது உத்தரவிட்டனர்

11:39 AM, 14 Aug

நம்மை வழி நடத்துகிற அனைத்து அம்சங்களும் ஸ்டாலினுக்கு உள்ளது- டி ஆர் பாலு

கருணாநிதி இறந்த அன்று இரவே எங்களுக்கு தெரிந்துவிட்டது

தலைமைக்குரிய பண்பு ஸ்டாலினிடம் உள்ளது

மெரினா விஷயத்தில் ஸ்டாலின் எடுத்த முடிவுகள் தலைமை பண்புக்கு சான்று - டி ஆர் பாலு

11:05 AM, 14 Aug

மெரினாவையும் சேர்த்து 14 தொகுதிகளை வென்றவர் கருணாநிதி- ஜெ.அன்பழகன் பேச்சு

தமிழகத்தில் எந்த தலைவர் இறுதி அஞ்சலியை விட அதிக மக்கள் கூட்டம் கூடியது-ஜெ. அன்பழகன்

கருணாநிதிக்கு இடம் இல்லை என்றவர்களுக்கு தமிழகத்தில் இடம் இல்லாத நிலை ஏற்படுத்த வேண்டும்

திமுக செயற்குழு கூட்டத்தில் ஜெ.அன்பழகன் ஆவேசம்

10:52 AM, 14 Aug

திமுக செயற்குழுவில் பங்கேற்றுள்ள உறுப்பினர்கள் வரிசையாக கருணாநிதிக்கு புகழுரை

உறுப்பினர்கள் அடுத்தடுத்து உரையாற்றிய பிறகு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உரையாற்ற வாய்ப்பு

10:48 AM, 14 Aug

கருணாநிதிக்கு இரங்கல்: திமுக செயற்குழு உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி
10:48 AM, 14 Aug

1956 முதலே ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர் கருணாநிதி- திமுக செயற்குழு தீர்மானத்தில் பெருமிதம்

சீனப்போர் போன்ற காலங்களில் மத்திய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்த தேச பக்தர் கருணாநிதி

10:45 AM, 14 Aug

கருணாநிதி இல்லாமல் முதல் முறையாக நடைபெறும் திமுக செயற்குழு
10:36 AM, 14 Aug

கருணாநிதி பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்கள் பட்டியலிடப்படுகிறது

கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளையும் நினைவு கூர்ந்து திமுக செயற்குழு தீர்மானம்

10:30 AM, 14 Aug

திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் இரங்கல் தீர்மானத்தை வாசிக்கிறார்

கருணாநிதி நிகழ்த்திய சாதனைகளை வரிசையாக பட்டியலிடுகிறார்

10:26 AM, 14 Aug

திமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம்
10:02 AM, 14 Aug

திமுக செயற்குழுக் கூட்டம் தொடங்கியது மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்குழுக் கூட்டம்

கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது

கருணாநிதி மறைவுக்குப் பின்னர் முதல் செயற்குழுக் கூட்டம்

9:32 AM, 14 Aug

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை

மேட்டூர் அணைக்கு 1.5- 2 லட்சம் கனஅடி தண்ணீர் வர வாய்ப்பு

வரும் நாட்களில் பவானிசாகர் அணை நிரம்பும் நிலை உள்ளது

சென்னையில் இன்றும் நாளையும் மழை பெய்யும்

தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

8:25 AM, 14 Aug

பம்பை நதியில் கரைபுரண்டோடும் வெள்ளம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு

இன்றும், நாளையும் பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு

8:12 AM, 14 Aug

முல்லைப்பெரியாறு அணை 136 அடியை எட்டியது

பொதுமக்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கைவிடுக்கப்பட்டது: பொதுப்பணித்துறை

தேனி, இடுக்கி, முல்லைபெரியாறு நீரோட்ட பாதையில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை

138 அடியானதும் 2வது கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும்

அணை நீர்மட்டம் 140 அடியானதும் 3ம் கட்ட எச்சரிக்கைவிடப்படும்

READ MORE

English summary
The DMK executive committee meeting will be held at 10am on Tuesday. The party asked all committee members to participate in the meeting without fail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X