For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கண்ணா, மதுரை திமுக கூட்டம் வெறும் டிரெய்லர் தான்: ஜே. அன்பழகன்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மதுரையில் நடந்த திமுக பொதுக்கூட்டம் வெறும் டிரெய்லர் தான் என அக்கட்சி எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையில் திரும்பும் பக்கம் எல்லாம் அதிமுக தொண்டர்கள் கூட்டமாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை மதுரையில் திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். இதனால் நேற்று மதுரையில் திமுக தொண்டர்கள் அலை வீசியது.

இந்நிலையில் இது குறித்து திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

எங்கள் அன்புக்குரிய மு.க. ஸ்டாலினின் மாஸ் மதுரையில் தெரிந்துவிட்டது. இது வெறும் டிரெய்லர் தான், மெயின் பிக்சர் 2016ம் ஆண்டில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.

English summary
DMK MLA J. Anbazhagan tweeted that, 'Mass redefined at Madurai for our beloved @mkstalin.This is only the Trailer, main picture will be screened on 2016.'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X