For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை: பராமரிப்பு பணி காரணமாக... 3 மாதங்களுக்கு சனி, ஞாயிறுகளில் பயணிகள் ரயில் ரத்து

Google Oneindia Tamil News

மதுரை:பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி, 3 மாதங்களுக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-

ரயில்பாதை பராமரிப்பு மற்றும் பாலம் பணிகள் நடைபெற்று வருவதால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயணிகள் ரயில் ரத்து மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 27ம்தேதி முதல் 2015 மார்ச் 26ம்தேதி வரை பயணிகள் ரயில் இயங்காது.

MADURAI DIVISION PRESS RELEASE : TEMPORARY CANCELLATION OF PASSENGER TRAINS ON SATURDAYS / SUNDAYS

இந்த அறிவிப்பின் படி சனிக்கிழமை இயங்கும் திருச்சி-காரைக்குடி பயணிகள் (76831) ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் திண்டுக்கல்-பழனி (56774), பழனி-திண்டுக்கல் (56773), திருச்சி-மானாமதுரை (76807), மானாமதுரை-திருச்சி(76806), செங்கோட்டை- திருநெல்வேலி (56798), திருநெல்வேலி-செங்கோட்டை (56799), தூத்துக்குடி-திருநெல்வேலி (56827), திருநெல்வேலி- தூத்துக்குடி (56828), காரைக்குடி- திருச்சி( 76830), திருநெல்வேலி-செங்கோட்டை (56803), செங்கோட்டை-திருநெல்வேலி( 56802) ஆகிய பயணிகள் ரயில் 3மாதங்களுக்கு இயங்காது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.தற்போது சபரிமலை சீசன்,கிறிஸ்துமஸ் விடுமுறை,பொங்கல் பண்டிகை என வரிசையாய் விடுமுறைகள் வரும் நிலையில் தென்னக ரயில்வே பயணிகள் ரயில்சேவையை தொடர்ந்து பராமரிப்பு பணியை மேற்க் கோள் காட்டி நிறுத்துவதால் எராளமான பயணிகள் தவிப்புக்குள்ளகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

English summary
To facilitate maintenance of track and bridges over Madurai division for safe running of trains, the following passenger trains will be temporarily cancelled on Saturdays / Sundays for a further period of three months from 27.12.2014 to 26.03.2015
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X