For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொல்லை தராதீர்கள்.. முதியோர் பென்ஷன் விஷயத்தில் வங்கிகளுக்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு

முதியோர் பென்ஷன் தொகைக்கு கமிஷன் வசூலிக்க வங்கிகளுக்குத் தடை விதித்தது மதுரை உயர்நீதிமன்றக் கிளை

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை: முதியோர் பென்ஷன் பெறுபவர்களிடம் கமிஷன் வசூலிக்க வங்கிகளுக்கு மதுரை உயர்நீதிமன்றக்கிளை இடைக்காலத்தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் திட்டங்களான முதியோர் பென்ஷன், உதவித் தொகை பெறுபவர்களிடம் வங்கிகள் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்துவருகின்றன. வங்கிக் கணக்குகளில் போதிய அளவு இருப்பு இல்லாததால் இந்தத் தொகை அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

Madurai High Court Branch put interim Ban for banks to collect penalty from Old age pension

முதியோர் உதவித்தொகையான 1000 ரூபாயை ஒருவர் பெறுகிறார் என்றால், வங்கியில் இருப்புத்தொகை இல்லை என்று கூறி அவர்களிடம் 350 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஏற்கனவே, கஷ்டத்தில் இருப்பவர்களை மேலும் இது கஷ்டத்தில் ஆழ்த்துகிறது இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஜோயல் என்பவர் வழக்குத் தொடுத்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக்கிளை முதியோர் பென்ஷன், உதவித்தொகை வழங்கும் போது வங்கிகள் கமிஷன் மற்றும் அபராதத் தொகை வசூலிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், இதுகுறித்து மூன்று வாரங்களில் பதிலளிக்க ரிசர்வ் வங்கி ஆணையருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

English summary
Madurai High Court Branch put interim Ban for banks for collecting fine amount in Old age pensions and asked answer from RBI
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X