For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலத் தொடக்கம் - வீடியோ

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கும்.

By Suganthi
Google Oneindia Tamil News

மதுரை: உலகபிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா கோடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. மே 8ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கும். சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகர் திருவிழா கோலம் பூண்டுள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடக்கும் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றது. இந்த வருடம் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

 Madurai meenatchi amman koil 'chitrai thiruvizha' started

மே.5ஆம் தேதி இரவு 6.55 மணி முதல் 7.19 மணி வரை மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. மே 6ல் திக்கு விஜயம், மே.7ல் காலை 8.55 மணி முதல் 8.59 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மே 8ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது.

நான்கு மாசி வீதிகளிலும் தேர் பவனி வரும். மே 9ஆம் தேதி கோயில் தெப்பத்தில் தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் விழா நிறைவுபெற உள்ளது. விழாவை முன்னிட்டு அம்மன், சுவாமி பல்வேறு திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். இதற்காக சிம்மம், யாளி, யானை உள்ளிட்ட வாகனங்களை அலங்கரிக்கும் பணி நடந்து வருகிறது.

English summary
World famous Madurai meenatchi amman koil 'chitrai thiruvizha' started yesterday with flag hoisting. On May 8th Kallalagar vaigai river bath will take place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X