For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லோருக்கும் லொக் லொக்.. மதுரைக்காரங்களுக்கு "லக் லக்".. எய்ம்ஸ் வரவை கொண்டாடும் நெட்டிசன்கள்!

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவதற்கு அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    எய்ம்ஸ் வரவை கொண்டாடும் நெட்டிசன்கள்!- வீடியோ

    சென்னை: எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவதற்கு அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும் அரசியல் கட்சிகள் எங்களால் தான் இது சாத்தியமானது என உரிமை கொண்டாட தொடங்கியுள்ளன.

    எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு பரிசீலனையில் இருந்த தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    எது எப்படியோ எங்கள் ஊருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிட்டது என மதுரை மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். அதேநேரத்தில் எங்களால்தான் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை சாத்தியமானது என அரசியல் கட்சிகள் இப்போதே உரிமை கொண்டாட தொடங்கியுள்ளன.

    லக் லக்ன்னு..

    இருமல் வந்தா எப்படி இருமுவீங்க.?
    லொக்..லொக் ன்னு..
    நாங்க "லக்..லக்" ன்னு..!
    #எய்ம்ஸ் @ மதுரை

    இது காங்கிரஸ்

    #தேசிய_தளபதி #மாணிக்கம்_தாகூர் அவர்களின் அரும் பெரும் கனவு மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் #எய்ம்ஸ் மருத்துவமனை. எத்தனை இடையூறுகள் இதற்காக நாங்கள் இருந்த உண்ணாவிரத தொடர் போராட்டங்கள் எத்தனை எத்தனை. #தேசிய_தளபதியின் கனவு நிறைவேறட்டும்
    மதுரை மண்ணிலே

    இது பாஜக

    மதுரைக்கு #எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு வந்த உடனே மத்திய அமைச்சர் மாண்புமிகு #பொன்_இராதாகிருஷ்ணன் அவர்கள் மருத்துவமனை அமையவிருக்கும் இடத்தை #ஆய்வு செய்தார்கள்....

    இது திமுக

    #எய்ம்ஸ் நாயகனே #
    உங்கள் கடின உழைப்பால் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வர பாடுபட்டதற்கு நன்றி,,,, நன்றி,,,,

    இது அதிமுக

    #எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை வராது என்று சொன்னார்கள் #திமுக!!
    #வென்று சாதித்து காட்டியது மாண்புமிகு அம்மா அவர்களின் #அஇஅதிமுக அரசு!!

    English summary
    Madurai People are happy to have AIMS in their district. But Political parties started to claims the possible.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X