For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீனாட்சி கோவில் கோபுரம் செட் போட்ட செல்லூர் ராஜூ - அம்மன் கோபத்தால் தீ விபத்தா?

மீனாட்சி கோவில் கோபுரம் செட் போட்ட செல்லூர் ராஜூ - அம்மன் கோபத்தால் தீ விபத்தா?

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் செத்து மடிந்த புறாக்கள் | Oneindia Tamil

    மதுரை: அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டு காது குத்து விழாவில் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் போல செட் போட்டது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்திற்கு மேலே எந்த கட்டமும் இருக்கக் கூடாது என்பது மதுரையில் ஆகம விதி. அதே போல மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் போல எந்த செட்டும் போடக்கூடாது என்றும் கூறப்படுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழை வெள்ளம் புகுந்தது. அப்போதே பக்தர்கள் கோவில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இப்போது நெருப்பு பற்றி எரிந்துள்ளது.

    விருது பெற்ற கோவில்

    விருது பெற்ற கோவில்

    இந்தியாவில் உள்ள கோயில்களிலேயே தூய்மையான கோயில் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்ந்தெடுக்கப் பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் இதற்கான விருதை மாவட்ட கலெக்டர் வீரராகராவ் பெற்றுக்கொண்டார்.

    கோவில் கொடி மரம் வரை வெள்ளம்

    கோவில் கொடி மரம் வரை வெள்ளம்

    கடந்த அக்டோபர் மாதம் மதுரையில் கொட்டித்தீர்த்த கனமழைக்கு வெள்ளம் பெருக்கெடுத்தது. வெள்ள நீர் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் புகுந்தது. கொடி மரம் வரை வெள்ள நீர் பாய்ந்தோடி பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. கோவிலை சுற்றியும், கோவிலுக்கு உள்ளேயும் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை அப்போதே எழுந்தது.

    அசத்தல் அழைப்பிதழ்

    அசத்தல் அழைப்பிதழ்

    இந்த நிலையில் கடந்த வாரம் பாண்டி கோவில் பகுதியில் காது குத்து விழா நடத்திய அமைச்சர் செல்லூர் ராஜூ வீடியோ வடிவில் அழைப்பிதழை அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்திருந்தார்.

    மீனாட்சி அம்மன் கோவில்

    மீனாட்சி அம்மன் கோவில்

    மீனாட்சி அம்மன் கோவில் கோபுர முகப்பு போல செட் போடப்பட்டிருந்தது. பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட அந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பங்கேற்றனர். லட்சக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்றனர். தலைமறைவாக இருந்த பைனான்சியர் அன்புச்செழியனும் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.

    அம்மன் கோபமா?

    அம்மன் கோபமா?

    ஆகம விதிப்படி கோவில் கோபுரம் போலவோ, கோபுரத்தை விட உயரமாகவோ எந்த கட்டிடமோ இருக்கக் கூடாது. ஆனால் செல்லூர் ராஜூ வீட்டு விசேஷத்தில் கோவில் கோபுரம் போல போடப்பட்டது அம்மன் கோபத்தை அதிகரித்து விட்டதாக உள்ளூர்வாசிகள் கூறி வருகின்றனர். இந்த கோபத்தை தணிக்க அமைச்சர் செல்லூர் ராஜூ என்ன யாகம் நடத்தப் போகிறாரோ?.

    English summary
    People in Madurai believe that Minister Sellur Raju's Meenakshi Amman temple set in his family function is the reason for the bad incident in the temple.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X