For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உசிலம்பட்டியில் பதினோறு ஆண்டுக்கு பிறகு கோலாகலமாகக் கொண்டாடபட்ட ஜல்லிக்கட்டு!

மதுரையை அடுத்துள்ள உசிலம்பட்டியில் கடந்த 11 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. தற்போது அங்கு ஜல்லிகட்டு நடத்தப்பட்டதால் மக்களும் காளைபிடி வீரர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை உசிலம்பட்டியில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. அதனால் வீரர்களும் காளை உரிமையாளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மதுரை உசிலம்பட்டியில் வருடம்தோறும் ஜல்லிக்கட்டு உற்சாகமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், பல்வேறு காரணங்களால் அங்கு ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படவில்லை.

 In Madurai Usilampatti after 11 years jallikattu conducted

அண்மையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என எழுந்த மிகப் பெரிய புரட்சியால், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிரான உச்சநீதிமன்ற தடை நீக்கப்பட்டு, ஜல்லிகட்டு நிரந்தர சட்டம் கொண்டு வரப்பட்டது.

அதனையடுத்து, தமிழகத்தின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அலங்காநல்லூர் உள்ளிட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு உலகமே வியக்கும் வண்ணம் நடத்தப்பட்டது.

தற்போது, மதுரை உசிலம்பட்டியில் 11 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஜல்லிக்க்கட்டு தற்போது மிகுந்த உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும் கொண்டாடப்பட்டது. அதில், 20 காளைகளும் 300 காளை பிடி வீரர்களும் கலந்துகொண்டர்.

ஜல்லிக்கட்டில் விளையாடி காளையை அடக்கிய வீரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. 11 வருடங்கள் கழித்து ஜல்ல்கிக்கட்டு நடத்தப்பட்டதால் ஊர்மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

English summary
In Mdurai Usilampatti, after 11 years, Jallikattu conducted. In this 20 ox and 300 players participated with utmost happiness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X