For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாதுரி, புவனேஸ்வரி, வினிதாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ராஜேந்திரன்.. ஒரு டிஎஸ்பியின் கதை!

காவல்துறையில் பல சாதனைகளை செய்த ராஜேந்திரன் பணி ஓய்வு பெறுகிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுராந்தகம் டிஎஸ்பி ராஜேந்திரன் ஓய்வு பெறுகிறார்- வீடியோ

    மதுராந்தகம்: காவல்துறை மீதும், காவலர்கள் மீதும் ஆயிரம் குறைகளை சொன்னாலும் சில சமயங்களில் சில போலீசாரின் செயல்கள் நம்மை பெருமை கொள்ளவே செய்கிறது. கடமை தவறாத ஒரு போலீஸ் அதிகாரியை பற்றிய செய்திதான் இது. காவல்துறையை தன் உயிர்மூச்சாக கொண்டு செயல்பட்டவரின் செய்திதான். இதனை மக்கள் அனைவரும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறைகள் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று.

    மதுராந்தகத்தில் டிஎஸ்பியாக இருந்தவர் என்.பி.ராஜேந்திரன். சென்னை கமிஷனராக விஜயகுமார் பணியிலிருந்த சமயத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைளை எடுத்தார். முக்கியமாக, 2002-2003-ம் ஆண்டில் விபச்சாரம் தலைவிரித்து தாண்டவமாடிய சமயம். எனவே விபச்சாரத்தை ஒழித்துக்கட்ட கமிஷனர் களமிறங்கினார். அப்போது, விபச்சார தடுப்பு பிரிவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக ராஜேந்திரன்தான் இருந்தார். விபச்சாரத்தை ஒழிக்க கமிஷனரிடம் இருந்து உத்தரவு வந்ததும், களமிறங்கி விட்டார் ராஜேந்திரன்.

    நடிகைகள் கைது

    நடிகைகள் கைது

    அப்போது பல நடிகைகள் விபச்சாரத்தை கோடம்பாக்கம் வீதிகளில் உலவ விட்டிருந்தார்கள். கார்கள், ஓட்டல்கள், ரிசார்ட்கள் என பல்வேறு இடங்களில் விபச்சாரத்தை களமிறக்கினார்கள் சில நடிகைகள். அதிரடிகளை கையில் எடுத்தார் ராஜேந்திரன். பல்வேறு இடங்களில் ரெய்டுகளை நடத்தினார். அதில் பல நடிகைகள் பிடிபட்டனர். நடிகைகள் பெயர்களை அறிந்து தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    கோடம்பாக்கம் கலங்கியது

    கோடம்பாக்கம் கலங்கியது

    மாதுரி, புவனேசுவரி, வினிதா, சாய்ரா பானு, என பட்டியல் தொடர்ந்தது. தினந்தோறும் நடிகைகள் விபச்சாரத்தில் கைது என்ற தலைப்பு செய்தி பத்திரிகைகளில் பிரதான இடங்களை பிடித்தன. கோடம்பாக்கமே நடுக்கம் கொண்டது. தமிழ் சினிமா உலகமே பரபரப்பானது. வரிசையாக கைது செய்யப்பட்ட நடிகைகள் கோர்ட் படிகளில் ஏறி இறங்கி வந்தனர்.

    புரோக்கர்கள் கைது

    புரோக்கர்கள் கைது

    அதேபோல, இந்த விபச்சாரத்துக்கு உதவியாக இருந்த புரோக்கர்கள் கைது ஆனார்கள். விபச்சார புரோக்கர்கள் ஃபேமஸ் ஆனதே ராஜேந்திரனின் நடவடிக்கைக்கு பின்னர்தான். பாம்பே நாகேசுவரராவ், விக்கி, டெய்லர் ரவி, பூங்கா வெங்கடேசன், ஹைதராபாத் பிரசாத் உள்ளிட்ட பலர் கைது ஆனார்கள். இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால் இதில் கைதான நடிகைகளில் சிலரும், விபச்சார புரோக்கர்களில் சிலரும் சிறையில் உட்கார்ந்து கொண்டு சுயசரிதையே எழுத தொடங்கிவிட்டார்கள். அப்போது அதனையும் சில பத்திரிகைகள் பிரசுரித்து வியாபாரமாக்கி வந்தன.

    துப்பாக்கி வைத்து கொள்

    துப்பாக்கி வைத்து கொள்

    இப்படி தொடர்ச்சியான அதிரடிகளை மேற்கொண்ட ராஜேந்திரன் கிட்டத்தட்ட விபச்சார தடுப்பு பிரிவின் கீழ் மட்டும் 2015 குற்றவாளிகளை கைது செய்துள்ளார். நூற்றுக்கணக்கானோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தார். இது ஒரு அசாதாரண முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் ராஜேந்திரனுக்கு பகைகள் பெருகின. கொலை செய்வதற்கு பலமுறை முயற்சிகள் நடைபெற்றன. அதனால் கமிஷனர் விஜயகுமார் இவருக்கு துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதியும் தந்தார்.

    சைக்கோ கொலையாளிகள்

    சைக்கோ கொலையாளிகள்

    ஒரு கட்டத்தில் சைக்கோ கொலையாளிகள் என்று பரபரப்பு செய்தி வந்து சென்னையையே ஒரு கலக்கு கலக்கியது. காலையில் எழுந்து நியூஸ்பேப்பரை பார்த்தால் சென்னையின் ஏதாவது ஒரு பகுதியில் ஒருவர் கொலையுண்டு கிடப்பார். அவர் எப்படி இறந்தார் என்றே கண்டுபிடிக்க முடியாது. தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டி இறந்திருப்பார்கள். எந்த தெருவில் கொலை நடக்கும் என்றே தெரியாது. இப்படியே தினமும் தொடர்ந்தது. இறந்தவர்கள் எல்லோருமே யாருமில்லாதவர்கள், கேட்க நாதியில்லாதவர்கள், பிளாட்பாரத்தில் படுத்து பொழுதை கழிப்பவர்கள். எனவே போலீசார் திணறினர்.

    தனி இடம் உண்டு

    தனி இடம் உண்டு

    இது சம்பந்தமான வழக்குகளை கையிலெடுத்தார் ராஜேந்திரன். திறமையாக துப்புதுலக்க ஆரம்பித்தார். சைக்கோ கொலையாளிகள் 7 பேரை பிடித்து கைது செய்து ஆயுள் தண்டனையும் வாங்கி கொடுத்தார். இதற்காக 2012-ம் ஆண்டு ஜனாதிபதி விருதும் இவருக்கு கிடைத்தது. கற்பழிப்பு டூ கலவரம் வரை, எந்த குற்றவாளியாக இருந்தாலும் ராஜேந்திரன் வச்ச குறியிலிரு்து தப்ப முடியாது. இப்படிப் பிரபலமான ராஜேந்திரன் மதுராந்தகம் டிஎஸ்பியாக ஓய்வு பெறுகிறார். தமிழக காவல்துறை மறக்க முடியாத வெகு சில காவல்துறை அதிகாரிகளில் ராஜேந்திரனுக்கும் ஒரு இடம் உண்டு.

    English summary
    Maduranthakam DSP Rajendran retires
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X