For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேசபக்தி கொண்டவர் என சொல்லிக்கொள்ளப்படும் இந்தியரால் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.. கமல்ஹாசன்

Google Oneindia Tamil News

சென்னை: தேச தந்தை மகாத்மா காந்தி தேசபக்தி கொண்ட இந்தியர் என கூறப்படும் நபரால் இதே நாளில் கொல்லப்பட்டார் என் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.

தேசதந்தை மகாத்மா காந்தி 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி அதாவது இதே நாளில் தான் நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Mahatma Gandhi was shot dead by an allegedly patriotic indian on this day: kamal hassan

மகாத்மா காந்தியின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியின் நினைவை போற்றும் வகையில் அவருக்கு இன்று பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், "சீர்திருத்தப்பட்ட உலகில் மிகக் குறைந்த மற்றும் சராசரி விமர்சன வடிவம் படுகொலை ஆகும். உலக அமைதிக்கான மிக முக்கியமான தூதர் மற்றும் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகச்சிறந்த வழிகாட்டி, இந்த நாளில் தேசபக்தி கொண்டவர் என சொல்லிக்கொள்கிறார்களே அந்த இந்தியரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வரலாறு மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக இந்தியா காந்திஜியை நினைவில் கொள்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

கமல் ஹாசன் தனது இந்த டுவிட் பதிவின் மூலம் நாதுராம் கோட்சேவை கிண்டல் செய்துள்ளார். அதாவது கோட்சே தேச பக்தி கொண்டவர் என்று சொல்லிக்கொள்கிறார்கள் என்றும் அவர் தான் மகாத்மா காந்தியை கொன்றுள்ளார் என்றும் கமல் ஹாசன் கூறியுள்ளார். அத்துடன் படுகொலை என்பது மிக மோசமான எதிர்வினை என்பதையும் தனது பதிவின் மூலம் தெளிவுப்படுத்தி உள்ளார்

English summary
kamal hassan tweet that One of the most important ambassador of world peace and my personal torchbearer Mahatma Gandhi was shot dead by an allegedly patriotic Indian on this day:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X