For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2009-ல் ஜெ.வுக்கு நன்றி தெரிவித்து விடுதலைப் புலிகள் அனுப்பிய கடிதம்-பகிரங்கப்படுத்தினார் மைத்ரேயன்

2009-ல் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து விடுதலைப் புலிகள் அனுப்பிய கடிதத்தை அதிமுக எம்.பி. மைத்ரேயன் வெளியிட்டுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: 2009-ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் தமிழீழம் அமைய பாடுபடுவேன் என தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியதற்கு ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தமது மூலமாக விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர் நடேசன் அனுப்பி வைத்த கடிதத்தை அதிமுக ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மைத்ரேயன் தமது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு:

Maitreyan releases LTTE's thanks letter to Jayalalithaa in 2009

இன்று தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 63 வது பிறந்த நாள். 2009 ம் ஆண்டு ஈழ விடுதலைப் போரின் இறுதிக்கட்டம். இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்.

2009 ஏப்ரல் 25 ம் தேதி சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழ் ஈழம் அமைய பாடுபடுவேன் என்று குரல் கொடுத்தார். அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த பிரபாகரன் அம்மா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தார். நண்பர் நடேசன் அனுப்பிய மின்னஞ்சலை பதிவு செய்கிறேன்.

அக்கடிதத்தில் நடேசன் எழுதியுள்ளதாவது:

நேற்று சேலத்தில் இடம்பெற்ற அ.இ.அ.தி.முகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை ஜெயா தொலைக்காட்சியில் பார்த்தோம். எமது தலைவர் பிரபாகரன் உட்பட தளபதிகள் எல்லோரும் அதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தார்கள்.

Maitreyan releases LTTE's thanks letter to Jayalalithaa in 2009

ஏழு கோடி தமிழக மக்களின் குரலாக அம்மாவின் குரல் ஒலித்ததைக் கண்டு கவலைகளையும் துன்பங்களையும் மறந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். இதற்காக அம்மா அவர்களுக்கு தலைவர் அவர்கள் தனது நன்றியையும் வாழ்த்துகளையும் உடனடியாக தெரிவிக்குமாறு கூறியிருந்தார். அத்துடன் எங்கள் எல்லோருடைய வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ்வாறு நடேசன் கடிதத்தில் எழுதியுள்ளார்.

Maitreyan releases LTTE's thanks letter to Jayalalithaa in 2009
English summary
AIADMK MP V. Maitreyan today released a letter in his Face Book Page which indicates that the LTTE leader Veluppillai Prabhakaran wanted to thank to the Late Chief Minsiter Jayalalithaa for support to Tamil Eelam in 2009.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X