For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாம்பன் ரயில் பாலத்தில் பெரும் விரிசல்: ரயில்கள் நிறுத்தம்- சீர் செய்யும் பணி தீவிரம்

By Chakra
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: 100 ஆண்டு கால பழமையான பாம்பன் ரயில்வே பாலத்தில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதை சீர் செய்யும் பணியில் ஏராளமான ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம்- பாம்பனை இணைக்கும் இந்தப் பாலத்தில் நேற்று ஒரு அடி அளவுக்கு பெரிய விரிசல் ஏற்பட்டதை ரயில்வே ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து உடனடியாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சென்னை- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மண்டபத்திலேயே நிறுத்தப்பட்டது.

கொச்சி வேம்பனாடு கடல் பாலத்தையடுத்து இந்தியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய பாலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி ஒரு கப்பல் இந்தப் பாலத்தில் மோதியதில் சேதம் ஏற்பட்டது நினைவுகூறத்தக்கது.

மேலும் பாம்பன் ரயில் பாலம் தான் இந்தியாவின் முதல் கடல் பாலமாகும்.

ஜெர்மனி பொறியாளர் ஜெர்ஷர் வடிவமைத்த இந்தப் பாலம் 1913ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

Policemen stands guard after a major crack was noticed by railway workers in the 100-year-old Pamban Railway bridge

146 தூண்களுடன் இந்தப் பாலம் அமைக்கப்பட்டது. 270 அடி நீளம் கொண்ட பாம்பன் பாலத்தில் 1914ஆம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியது.

பாரம்பரிய சின்னமாக விளங்கும் பாம்பம் பாலம் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.

English summary
A major crack was noticed by railway workers in the 100-year-old Pamban Railway bridge, linking the mainland with this island town, officials said in Rameswaram on Thursday.They said track maintenance workers noticed the one-foot crack today and were repairing it.Consequently, the Chennai-Rameswaram Express was stopped at Mandapam, they said, adding it would be allowed to proceed to its onward destination after completion of works. The cantilever Pamban bridge is the second longest in India after the Vembanad bridge at Kochi in Kerala
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X