For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தஞ்சை: ஒரே டிராக்கில் எதிரெதிரே இரு ரயில்கள்... டிரைவரால் பெரும் விபத்து தவிர்ப்பு

Google Oneindia Tamil News

Major train accident avoided by driver's intelligent at Tanjore
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஒரே டிராக்கில் எதிர்பாராத விதமாக இரு ரயில்கள் எதிரேதிரே வந்தபோதும், டிரைவரின் சாமர்த்தியத்தால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் 4வது பிளாட்பாரத்தில் இன்று காலை 7.45க்கு திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில் வந்தது. அப்போது, சிக்னலைக் கடந்து 3வது பிளாட்பாரத்தில் செல்ல வேண்டிய சென்னையில் இருந்து தஞ்சை வந்த உழவன் விரைவு ரயிலும் தவறுதலாக 4வது பிளாட்பாரத்திலேயே வந்தது.

கடைசி நேரத்தில் சுதாரித்துக் கொண்ட உழவன் விரைவு ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால், காரைக்கால் ரயிலுக்கு சுமார் 200 அடி தொலைவில் இந்த ரயில் நின்றது.

சிக்னல் கோளாறால் நிகழவிருந்த பெரும் விபத்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டது. இதனால் பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

English summary
In Tanjore railway station Uzhavan express train mistakenly ran into the wrong flatform, where already a passenger train was standing there. The Express train driver intelligently stopped the train 200 meters away. Because of driver's presence of mind the major accident avoided.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X