For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரக்கு வாங்க காத்திருக்க சொன்னதால் 4 பேரின் கன்னத்தைக் கடித்த வாலிபர்!

Google Oneindia Tamil News

Man bites 4 members for alcohol…
மதுரை: மதுரையில் டாஸ்மாக்கில் சரக்கு வாங்க அதிக நேரம் ஆன காரணத்தால் வாலிபர் ஒருவர் டாஸ்மாக் ஊழியர்களைப் பிடித்து கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்ட கோர்ட்டு அருகே மாட்டுத்தாவணிக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது.

இன்று காலை கடை திறப்பதற்கு முன்பே பயனாளிகள் சரக்கு வாங்க காத்திருந்தனர்.

நச்சரித்த குடிமகன்கள்:

காலை 10 மணி அளவில் கடை திறந்தபோது காத்துக் கொண்டிருந்த அவர்கள் சரக்கு வாங்கும் ஆர்வத்துடன் சென்று டாஸ்மாக் கடை விற்பனையாளர் செல்லத் துரையை நச்சரித்தனர். அவரும் பொறுமையுடன் சரக்குகளை கொடுத்தார்.

ஒரே கல்ப்தான்:

இதில் ஒரு வாலிபர் சரக்கு வாங்கி அதே இடத்திலேயே அடித்தார். சிறிது நேரத்தில் அவருக்கு போதை தலைக்கேறியது.

மீண்டும் சரக்கு:

ஆனாலும் அந்த வாலிபர் மீண்டும் சரக்கு வாங்குவதற்காக டாஸ்மாக் விற்பனையாளர் செல்லத்துரையை அணுகினார். அப்போது அவர் சிறிது நேரம் காத்திருங்கள் என்று கூறினார்.

படாரென்று கடித்த வாலிபர்:

ஆனால் தனக்கு உடனடியாக சரக்கு வேண்டும் என்று செல்லத்துரையை அந்த வாலிபர் தொந்தரவு செய்தார். சரக்கு கொடுக்க சிறிது தாமதம் ஆனதால் பொறுமை இழந்த அவர் போதையில் திடீரென்று செல்லத்துரையின் கை, கன்னத்தில் கடித்தார்.

4 பேரும் பாதிப்பு:

மேலும் ஆத்திரம் அடைந்த அவர் அருகில் நின்றிருந்த 4 பேரையும் கன்னத்தில் கடித்தார். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

தர்ம அடி வாங்கிய வாலிபர்:

போதையில் ரகளை செய்த அந்த வாலிபரை அங்கிருந்தவர்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மேலும் அங்கே இருந்த கம்பத்தில் கட்டி போட்டனர்.

போலீசார் கைது:

இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டனர். வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் ரகளை செய்த வாலிபர் மானகிரியை சேர்ந்தவர் என தெரியவந்தது.

வாலிபரை மீட்ட மனைவி:

இதற்கிடையில் சம்பவம் குறித்து அறிந்து கொண்ட வாலிபரின் மனைவியும் சம்பவ இடம் வந்து தனது கணவரை விடுவிக்குமாறு கண்ணீர் மல்க கூறினார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.

English summary
Young man who is from manahiri bite 4 members in TASMAC for late of alcohol. Police warned him and send him with wife.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X