For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செங்கம் அருகே மணல் அள்ளச் சென்றவர் மரணம் - விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மணல் அள்ளச் சென்றவர் மரணமடைந்தது பற்றி விசாரணைக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    வனத்துறையினர் தாக்கியதால் உயிரிழப்பு-வீடியோ

    திருவண்ணாமலை: செங்கம் அருகே மேல்புழுதிப்பூரில் வனத்துறையினர் தாக்கியதில் திருமலை என்பவர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதியளித்துள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டம் மேல்புழுதிப்பூரில் சந்தாகவுண்டன்புதூர் வனப்பகுதியில் மாட்டுவண்டியில் மணல் ஏற்றி வந்த திருமலை என்பவர் மர்மமாக இருந்து கிடந்தார். வனத்துறையினரால் திருமலை அடித்துக்கொல்லப்பட்டு இருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர்.

    Man mystery death Minister Sreenivasan order to inquiry

    ஆத்திரமடைந்த கிராம மக்கள் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்தனர். வனத்துறை அதிகாரி தாண்டவராயனை பொதுமக்கள் அடித்து மிதித்தனர். இதில் தாண்டவராயன் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து வனத்துறையினருக்கு சொந்தமான இருசக்கர வாகனங்களுக்கு பொதுமக்கள் தீ வைத்தனர். மேலும் வனத்துறையினரை பொதுமக்கள் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திருமலை மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து செங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திருமலை மரணம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.

    English summary
    Minister Dindigual Said that, Police enquiry for the man mystery death of Tirumalai mear Tiruvannamalai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X