For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனைவியின் கள்ளக்காதலனை கடத்த கணவனிடம் காசு வாங்கிவிட்டு, காதலுக்கு உரம் போட்டு வளர்த்த கூலிப்படை!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மனைவியின் கள்ளக்காதலனை கடத்த கூலிப்படையை ஏவிய கணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் கூலிப்படையை சேர்ந்த இருவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையின்போது, கள்ளக்காதலை வளர்க்க, கூலிப்படையினர், ஐடியா கொடுத்து அதற்காக கள்ளக்காதலனிடமே பணம் பேரம் பேசிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சென்னை, மாதவரத்தை சேர்ந்தவர் பர்வீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் சுல்தான், சவுதி அரேபியாவில் சிவில் இன்ஜினியராக வேலை பார்க்கிறார்.

சிம்கார்டு கனெக்ஷன்

சிம்கார்டு கனெக்ஷன்

கணவர் வெளிநாட்டில் இருப்பதால், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற செல்போன் நிறுவன ஊழியருடன் பர்வீனாவுக்கு, கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. சிம்கார்டு கனெக்ஷன் கொடுப்பதில் ஆரம்பித்த இவர்கள் இருவர் பழக்கமும், நாளடைவில் வீட்டில் அவ்வப்போது உல்லாசம் அனுபவிக்கும் அளவுக்கு சென்றுள்ளது.

கணவனுக்கு தெரிந்தது

கணவனுக்கு தெரிந்தது

இந்நிலையில் கார்த்திக் தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்று பர்வீனா வற்புறுத்த ஆரம்பித்துள்ளார். இதற்கு கார்த்திக் மறுக்கவே, பர்வீனா, உடல் உறவுக்கு மறுப்பு தெரிவித்து கார்திக்கை விலக்கி வைத்துள்ளார்.

கள்ளக்காதலர்கள் இருவரும் ஊடலில் இருந்தநிலையில்தான், சுல்தானுக்கு தனது மனைவிக்கும் கார்த்திக்கும் நடுவேயான உறவு தெரியவந்துள்ளது.

கூலிப்படை கடத்தல்

கூலிப்படை கடத்தல்

இதையடுத்து நாமக்கல் மாவட்டம் திருச்சங்கோட்டை சேர்ந்த ரவி என்ற ரவிக்குமார் (24), ரெட் ஹில்ஸ் பகுதியை சேர்ந்த அப்பு என்ற விக்ரமாதித்தன் (25) மற்றும் மகேஷ் ஆகிய மூவரை கூலிப்படையாக அமைத்து கார்த்திக்கை கடத்துமாறு சவுதியில் இருந்தபடி ஏற்பாடு செய்துள்ளார் சுல்தான்.

காதல் தூதுவர்கள்

காதல் தூதுவர்கள்

ஆனால் அங்குதான் திட்டத்தில் ஒரு பெரிய டிவிஸ்ட். கூலிப்படையினர், கார்த்திக்கை சந்தித்து, சுல்தான் தீட்டிய திட்டத்தை கூறிவிட்டனர். மேலும், கடத்தாமல் இருக்க தங்களுக்கு பணம் தரும்படியும் கேட்டுள்ளனர். இன்னும் ஒருபடி மேலே போய் ரூ.5 லட்சம் தந்தால், பர்வீனாவுடன் மீண்டும் கள்ளக்காதலை தொடர ஒரு ஐடியோ போட்டுத்தருவோம் என்றும் கார்த்திக்கிடம் கூறியுள்ளனர்.

பழைய ஐடியா பாஸ்

பழைய ஐடியா பாஸ்

கார்த்திக் சம்மதிக்கவே, கூலிப்படையினர் ஒரு ஐடியா கொடுத்துள்ளனர். அதாவது, மூலக்கடை பகுதியில் பர்வீனா நடந்துவரும்போது, தாங்கள் சென்று அவரை கடத்துவது போல நடிப்போம் என்றும், அப்போது நீங்கள் வந்து எங்களை அடித்து விரட்ட வேண்டும் என்றும், இதனால் பர்வீனா கோபத்தை மறந்து உங்களோடு உல்லாசமாக இருப்பார் என்றும் கூலிப்படையினர் ஐடியா கொடுத்துள்ளனர்.

பட் இந்த டீலிங் பிடிச்சிருக்கு

பட் இந்த டீலிங் பிடிச்சிருக்கு

இந்த டீலிங் பிடித்துபோன கார்த்திக்கும், ரூ.5 லட்சம் தருவதாகவும், அதற்கு பதிலாக தன்னை கடத்தாமல்விடுவதுடன், பர்வீனாவுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூலிப்படையினருக்கு கண்டிசன் போட்டார். சம்பவத்தன்று, அதே திட்டத்தில், கூலிப்படையினரும், கார் ஒன்றில், மூலக்கடை நோக்கி, கார்த்திக் சென்றுகொண்டிருந்தார். ஆனால், கதையில் மேலும் ஒரு டிவிஸ்ட் உருவானது.

அதிக பணம் கிடைக்கிறது

அதிக பணம் கிடைக்கிறது

காரை ஓட்டிய கூலிப்படையினர், திடீரென, வண்டியை கிண்டி பக்கமாக செலுத்த ஆரம்பித்தனர். அதிர்ச்சியடைந்த கார்த்திக், ஏன் என்று கேட்டபோது, நீ தரும் பணத்தைவிட சுல்தான் அதிக பணம் தர சம்மதித்துள்ளார். எனவே உன்னை கடத்துகிறோம் என்று கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த கார்த்திக், தப்பிக்க முயன்றபடியே பயணித்துள்ளார்.

கைது

கைது

கார், கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்றபோது, கார்த்திக் தள்ளியதில், டிரைவர் நிலைகுலைந்து, காரை ஓட்டி டூவீலர் ஒன்றில் மோதியுள்ளார். இந்த விபத்தையடுத்து அப்பகுதி மக்கள் காரை சூழ்ந்து மறித்தனர். இதைபயன்படுத்தி தன்னை காப்பாற்றுமாறு கார்த்திக் கூச்சலிட்டார். சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த, கூலிப்படையினர் தப்பியோடினர். ஆனால், பொதுமக்களிடம் அப்பு சிக்கிக்கொண்டார். அவரை போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இந்நிலையில்தான், தலைமறைவாக இருந்த, ரவிக்குமாரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இருவருக்கும், நீதிமன்ற காவல்விதிக்கப்பட்டுள்ளது.

English summary
Chennai Police arrested two of three men hired by a man employed in Saudi Arabia to kidnap his wife's boyfriend.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X