For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி ரெக்கார்டை முறியடிப்பாரா ரஜினி.. ஒபாமா ஸ்டைலில் களமிறங்க திட்டம்.. மேன் vs வைல்டின் பின்னணி

பிரதமர் மோடியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்திருப்பது பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி ரெக்கார்டை முறியடிப்பாரா ரஜினி..

    சென்னை: பிரதமர் மோடியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்திருப்பது பெரிய வைரலாகி உள்ளது. இதற்கு பின் நடிகர் ரஜினியின் பிஆர் குழு நிறைய திட்டங்களை வைத்துள்ளது என்கிறார்கள்.

    பொதுவாக இமேஜ் என்பது அரசியலில் மிகவும் முக்கியமானது. அதிலும் இந்திய அரசியல் தற்போதெல்லாம் தலைவர்களின் இமேஜை நம்பி மட்டும்தான் இருக்கிறது. உலகம் முழுக்க அரசியல் தலைவர்கள் தங்களுக்கு என்று இமேஜை உருவாக்கிக் கொள்வதில் கவனமாக இருப்பார்கள்.

    அமெரிக்க அரசியலில் அதிபர் தேர்தலில் நிற்பவர்களின் இமேஜ் என்பது மிக மிக முக்கியமானது. பல நூறு கோடி செலவு செய்து டொனால்ட் டிரம்ப் தனது இமேஜை தேர்தலுக்கு முன் உருவாக்கி மக்கள் முன் கொண்டு சென்றார். அதில் வெற்றியும் பெற்றார்.

    பாகிஸ்தானில் இன்னொரு ஷாக்... 24 வயது இந்து பெண்ணை கடத்தி.. இஸ்லாமுக்கு மாற்றி.. கட்டாய திருமணம்! பாகிஸ்தானில் இன்னொரு ஷாக்... 24 வயது இந்து பெண்ணை கடத்தி.. இஸ்லாமுக்கு மாற்றி.. கட்டாய திருமணம்!

    ஒபாமா எப்படி

    ஒபாமா எப்படி

    அதேபோல்தான் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை தேர்தலில் நிற்கும் முன் ஒபாமா, இதே போல் இமேஜ் அரசியலை கையில் எடுத்தார். முதல் நான்கு வருடம் அவர் நன்றாக ஆட்சி செய்து இருந்தார். ஆனாலும் மக்கள் முன்னிலையில் ரீச் ஆக வேண்டும் என்பதால் வெகுஜன அரசியலை கையில் எடுத்தார். இதற்காக நிறைய டிவி நிகழ்ச்சிகளில் ஒபாமா தோன்றினார். எலன் நடத்தும் எலன் ஷோவில் கலந்து கொண்டார். அதேபோல் மேன் vs வைல்ட் ஷோவிலும் கலந்து கொண்டனர்.

    பெரிய அளவில் உதவியது

    பெரிய அளவில் உதவியது

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஒபாமாவிற்கு பெரிய அளவில் உதவியது. இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பேச வேண்டிய கருத்துக்களை ஒபாமா கூறினார். நானும் உங்களை போன்ற ஆள்தான், எனக்கு பகுட்டு கிடையாது. நான் எளிமையான மனிதன் என்று ஒபாமா தன்னை காட்டிக்கொண்டார். அதேபோல் அந்த நிகழ்ச்சியில் பியர் கிறில்ஸ் சாப்பிட்ட பாம்பு, தவளைகளை கூட, ஒபாமா ஒன்றாக சாப்பிட்டார். கிறில்ஸ் உடன் சேர்ந்து மலையும் ஏறினார்.

    செம ஷோ

    செம ஷோ

    இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் இடையே ஒபாமா பெரிய வரவேற்ப்பை பெற்றார். அமெரிக்காவில் அதிக பேரால் பார்க்கப்பட்ட மேன் vs வைல்ட் நிகழ்ச்சி இதுதான் என்றும் பெயர் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒபாமா தன்னுடைய இளமை காலத்தை பகிர்ந்து கொண்டார். ஒரு கறுப்பின இளைஞராக தான் எதிர்கொண்ட அழுத்தங்களை பேசினார். மிட்சல் உடனான காதலை பேசினார். இது மக்களை பெரிய அளவில் கவர்ந்தது. அவரின் இமேஜும் உயர்ந்தது .

    மோடி எப்படி

    மோடி எப்படி

    பொதுவாக உலகம் முழுக்க சுற்றும் இந்திய பிரதமர் மோடி, அங்கு தலைவர்கள் செய்யும் இமேஜ் அரசியலை இங்கே செயல்படுத்துவது வழக்கம். பாஜகவிற்கு வலுவாக இருக்கும் ஐடி குழுவும் இதை எளிதாக செய்து முடிக்கும். அதேபோல்தான் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியை மோடி இந்திய அரசியலுக்கும் களமிறங்கினார். ஆமாம் கிறில்ஸ் உடன் சேர்ந்து இந்தியாவில் பிரதமர் மோடி மேன் vs வைல்ட் நிகழ்ச்சியை சூட் செய்தார்.இந்திய பிரதமர் மோடி, டிஸ்கவரி சேனலில் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அப்போதே பெரிய வைரலானது.

    மோடி வைரல்

    மோடி வைரல்

    இதில் பியர் கிறில்ஸ் உடன் மோடி பேசியதும், அவர் நடந்து கொண்ட விதமும் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சி முழுக்க மோடி ஹிந்தியில் மட்டுமே பேசினார். ஆனால் பியர் கிறில்ஸ் ஹிந்தியில் நமஸ்தே என்ற வார்த்தையை தவிர வேறு எதுவும் பேச தெரியாத நபர். வடஇந்தியா மக்களுக்கு புரிய வேண்டும் என்று மோடி இந்தியில் பேசினார். அவர் ஆங்கிலத்தில் பேச, இவர் இந்தியில் பதில் சொல்ல.. அந்த நிகழ்ச்சியே ஒரே ஆரவாரமாக இருந்தது.

    மாமிசம் சாப்பிடவில்லை

    மாமிசம் சாப்பிடவில்லை

    அந்த நிகழ்ச்சியில் பிரதமர் உடன் எப்போதும் இருக்கும் பாதுகாப்பு வீரர்கள் கேமராவுக்கு பின் இருந்தனர். அதேபோல் மோடி என்ன பேச வேண்டும் என்பதற்கான வசனகர்த்தாக்களும் உடன் இருந்தனர். இதெல்லாம் போக மோடிக்கு நிகழ்ச்சியின் போது உணவு சமைத்து தரவும் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மோடி தனியாக எங்கும் மாமிசம் சாப்பிடவில்லை. பேர் கிறில்ஸ் மோடி இருவரும் ஈவ்னிங் வாக் சென்றது போல நிகழ்ச்சி பாதுகாப்போடு உருவாக்கப்பட்டு இருந்தது.

    என்ன விலங்குகள்

    என்ன விலங்குகள்

    அதேபோல் மோடி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், நான் விலங்குகள் வந்தால் கொலை செய்ய மாட்டேன். எனக்கு கொலை மீது நம்பிக்கை இல்லை. கடவுள் எனக்கு உதவி செய்வார். அதேபோல் நான் 18 வருடங்களில் இப்போதுதான் லீவ் எடுக்கிறேன், என்று மோடி நிறைய விஷயங்களை குறிப்பிட்டார். மிக முக்கியமாக இளம் வயதில் தான் பட்ட கஷ்டங்கள், தான் கடந்து வந்த பாதைகள் அனைத்தையும் மோடி உருக்கமாக குறிப்பிட்டார். இந்த ஷோ பெரிய வரவேற்பை பெற்றது.

    செம ரீச்

    செம ரீச்

    லோக்சபா தேர்தல் நேரத்தில் மோடியின் இமேஜ் இதனால் கொஞ்சம் உயர்ந்தது. நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் மோடி ஆதரவாளர்கள், வட இந்தியர்கள் மத்தியில் இந்த ஷோ பெறிய ஹிட் அடித்தது. . அதேபோல் அந்த ஷோவிற்கும் ஒரே நாளில் டிஆர்பி இந்தியாவில் கூடி இருக்கிறது. மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் உலகம் முழுக்க அதிக நபர்களால் பார்க்கப்பட்ட எபிசோட் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போதும் மோடி ரெக்கார்டை யாரும் பீட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ரஜினி எப்படி

    ரஜினி எப்படி

    இந்த நிலையில்தான் பிரதமர் மோடியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்திருப்பது பெரிய வைரலாகி உள்ளது. ஒபாமா, மோடியை போல தன்னுடைய இமேஜை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ரஜினி இதை கையில் எடுத்துள்ளார். சமீப கால பேட்டிகளால் ரஜினியின் இமேஜ் பெரிய அளவில் சரிந்தது. தர்பாரும் ரஜினியின் தர்பார் கனவுக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. முக்கியமாக பெரியார் பற்றி ரஜினி பேசி தேவையில்லாமல் சர்ச்சையில் சிக்கினார். இதை மீட்டு எடுக்க இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் உதவும் என்கிறார்கள்.

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    இதற்கு பின் நடிகர் ரஜினியின் பிஆர் குழு நிறைய திட்டங்களை வைத்துள்ளது என்கிறார்கள். முதல் விஷயம், இந்த நிகழ்ச்சியில் ரஜினி ஆன்மீகம் குறித்து அதிகம் பேசுவார். மக்களை தனது ஆன்மீக அரசியல் பக்கம் இழுக்க முயற்சி செய்வார் என்கிறார்கள். அதோடு, இன்னொரு பக்கம் அவர் தன்னுடைய வறுமையான இளமை காலம், தான் நடத்துனராக இருந்த காலம், சினிமாவில் தொடக்கத்தில் ரஜினி பட்ட கஷ்டங்கள் குறித்தும் பேசுவார் என்கிறார்கள். மக்களுக்கு நான் எளிமையானவன் என்பதை புரிய வைக்க ரஜினிக்கு இது உதவும் என்கிறார்கள்.

    அரசியல் திட்டம்

    அரசியல் திட்டம்

    ஒபாமா, மோடிக்கு கை கொடுத்தது போல மேன் vs வைல்ட் நிகழ்ச்சி தனக்கும் அரசியல் ரீதியாக கைகொடுக்கும் என்று ரஜினி நினைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரஜினி பெரிதாக சாகசம் எதையும் செய்ய மாட்டார். ஆனால் நிறைய உணர்ச்சிகரமான விஷயங்களை பேசுவார். இதன் மூலம் மக்களை கவர்வார் என்று கூறுகிறார்கள். பெரும்பாலும் ரஜினி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு பின் அரசியல் குறித்த முக்கிய பேட்டியை அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கெல்லாம் இந்த நிகழ்ச்சி உதவும் என்கிறார்கள்.

    என்ன ரெக்கார்ட்

    என்ன ரெக்கார்ட்

    பாஜக சொல்படி நிறைய விஷயங்கள் பேசும் ரஜினிகாந்த், தற்போது அதே பாஜக ஸ்டைலில் இமேஜ் அரசியலை கையில் எடுத்துள்ளார். இது எந்த அளவிற்கு அவருக்கு உதவும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.அதேபோல் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் உலகம் முழுக்க அதிக நபர்களால் பார்க்கப்பட்ட எபிசோட் மோடி எபிசோட்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை நடிகர் ரஜினிகாந்த் முறியடிப்பாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Man Vs Wild, featuring Rajinikanth may become a huge image politics like Obama and Modi .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X