For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயிர்பலி கேட்கும் மணப்பாறை புதிய பஸ் நிலைய கட்டிடம் - ரூ.5 கோடி 5 மாதம் கூட தாங்கலையே

மணப்பாறையில் ரூ. 5 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் திறக்கப்பட்ட கட்டிடம் மூன்றே மாதத்தில் மேற்கூரை மற்றும் தூண்களில் விரிசல் ஏற்பட்டு இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருச்சி: மணப்பாறை பேருந்து நிலையம் திறக்கப்பட்ட மூன்றே மாதத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் எப்போது இடிந்து விழுமோ என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் சோமனூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் நிற்குமிடத்தில் மேற்கூரை இடிந்து 5 பேர் உயிரிழந்தனர். நேற்று பேருந்து பணிமனையில் கட்டிடம் பரமரிப்பில்லாததால் கட்டிடம் இடிந்த விழுந்து 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Manapparai New bus stand building damaged

இதேபோல தமிழகத்தில் பல அரசு கட்டிடங்கள் பராமரிப்பின்றி இருப்பதால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் அறை மற்றும் கடைகள் கட்டிமுடிக்கப்பட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திறந்துவைக்கப்பட்டது.

ரூ. 5 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் திறக்கப்பட்ட கட்டிடம் மூன்றே மாதத்தில் மேற்கூரை மற்றும் தூண்களில் விரிசல் ஏற்பட்டு இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

பேருந்து நிலையத்தில் 27 கடைகள் உள்ளன. போக்குவரத்து கழக அறை அருகே உள்ள இரண்டு தூண்கள் உள்ள இடத்தின் கான்கிரீட் பகுதியில் விரிசல் ஏற்பட்டு மழை நேரத்தில் அதன் வழியாக தண்ணீர் வடியும். தற்போது அந்த விரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

பேருந்து நிலையத்தில் உள்ள சிமெண்டு தூண் ஒன்று மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் பஸ் நிலையத்தில் நிற்கவே பயணிகள் அச்சமடைந்துள்ளனர். தீபாவளியன்று போக்குவரத்து கழக அறை அருகே சிமெண்டு தூண்களின் முன்பு இருந்த சிமெண்டு பூச்சு திடீரென இடிந்து விழுந்தது.

தூணின் பின் பகுதியிலும் சிமெண்டு பூச்சு விழுந்தது. சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்த போது அங்கிருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கட்டி முடிக்கப்பட்ட 3 மாதங்களில் பஸ் நிலையத்தின் சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்த சம்பவம் சமூக ஆர்வலர்களை வேதனைடையச் செய்துள்ளது. இடிந்து விழும் சிமெண்டு பூச்சுகளை உடனடியாக சரிசெய்வதுடன் மேலும் சேத மடைந்த பகுதிகளையும் சரிசெய்திட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டிடம் முற்றிலும் இடிந்து விழுந்து உயிர்பலி ஏற்படும் முன்பாக இவற்றை தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும். தரம்குறைந்த பொருட்களைக் கொண்டு கட்டப்படும் கட்டிடங்களே பொதுமக்களின் உயிர்களுக்கு எமனாகி விடுகின்றன. எனவே கட்டிட ஒப்பந்தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

English summary
New bus stand in Manapparai building damaged. The old bus stand, built in 1981, had been demolished altogether, indicating that the new building would have a state-of-the-art infrastructure opening on May,2017 to CM Edapadi Palanisamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X