For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மணப்புரம் நிதி நிறுவன கொள்ளையில் கைதான அரசு பஸ் கிளீனர்கள்... பின்னணி தகவல்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: வத்தலக்குண்டு மணப்புரம் நிதி நிறுவன கொள்ளை வழக்கில் தூத்துக்குடி அரசு போக்குவரத்துக் கழகத்தில் கிளீனராக வேலை பார்த்து வந்த இரண்டு பேர், கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஸ் கிளீனர் வேலை பார்த்துக்கொண்டே இரவில் கொள்ளையர்களாக வலம் வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வத்தலக்குண்டு 'மணப்புரம் கோல்டு பைனான்ஸ்' நிறுவனத்தில் கடந்த 24ம் தேதி காலை 8.44 மணிக்கு புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள் ஆறு பேர், ரூ.17 லட்சம் மற்றும் ரூ.பல கோடி அடகு நகைகளை கொள்ளை அடித்தனர்.

Manappuram Theft: Two held in Tuticorin

கொள்ளை நடந்த அன்று பக்ரீத் என்பதால், நிதி நிறுவனத்திற்கு எதிரே 50 போலீசார் பாதுகாப்பில் இருந்தனர். தொழுகை முடிந்து ஏராளமானோர் திரும்பிக்கொண்டிருந்தனர். காலையில் அலுவலகம் திறக்கும் நேரத்தில் கொள்ளையர்கள் உள்ளே புகுந்து, ஒன்பதே நிமிடங்களில் கொள்ளை அடித்து சென்றனர்.

டி.ஐ.ஜி., அறிவுச் செல்வன், சரவணன் எஸ்.பி., மேற்பார்வையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது. நிதி நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர்கள், காவலாளி பெருமாள் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தனிப்படை போலீசார் மதுரை, கேரளாவிற்கு குற்றவாளிகளைத் தேடிச் சென்றனர். கொள்ளையர்கள் நகை, பணத்தோடு மொபைல் போன்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர். இதனிடையே கொள்ளை நடந்த போது கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ, போட்டோக்கள் வாட்ஸ் அப் பில் வெளியாகின. இவற்றை வெளியிட்டது யார்? என்பதையும் போலீசார் விசாரணை செய்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் கிளீனராக பணியாற்றி வந்த முருகனையும், அவரது நண்பரையும் திண்டுக்கல் காவல்துறையினர் திடீரென கைது செய்தனர். மேலும், அவர்கள் தங்கியிருந்த அறைகளில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், அங்கு வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, இரண்டு பேரையும் திண்டுக்கல் அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் நகை பணத்தை கொள்ளையடித்ததை ஒத்துக்கொண்டனர்.

தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்துக் கழக டெப்போவில் கிளீனிங் வேலை செய்வதற்கான கான்ட்ராக்டை அதே டெப்போவில் காவலாளியை பணியாற்றி வரும் ஒருவர்தான் எடுத்து நடத்தி வருகிறார். அவரிடம் தூத்துக்குடியைச் சேர்ந்த முருகனும் அவரது நண்பரும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கிளீனராக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு டெப்போவில் தனி அறைகள் உள்ளன. பகல் நேரத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பஸ் கிளீனராக வேலை செய்யும் இருவரும் இரவு நேரத்தில் கொள்ளையர்களாக மாறி, பணம், நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The Vathalagundu police arrested two persons in connection with the theft of 17.5 kg gold worth Rs 5 crore and Rs 17 lakh cash from the office of Manappuram Gold Loans in Vathalagundu last week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X