For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் மார்ஸில் நடக்கும் தேர்தலில் போட்டியிடுவேனே: ராகுல்... ட்விட்டர் கலாட்டா

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மங்கள்யான் செவ்வாய் கிரகத்திற்கு சென்றுவிட்டதால் இனி மார்ஸ் சாக்லெட்டின் விலை குறைந்துவிடும் என்று நடிகை ஆலியா பட் கூறுவது போன்று மக்கள் ட்விட்டரில் காமெடி செய்துள்ளனர்.

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்திற்குள் நுழைந்த தினத்தை இந்திய மக்கள் கொண்டாடினர். மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை புகைப்படம் எடுத்தும் அனுப்பி விட்டது.

இந்நிலையில் மங்கள்யான் செவ்வாய் கிரகத்திற்கு சென்றது பற்றி ட்விட்டரில் மக்கள் காமெடியாக கருத்து தெரிவிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. அதில் சில உங்களுக்காக,

ஆலியா

ஆலியா

நம் நாட்டு ஜனாதிபதியே யார் என்று தெரியாத நடிகை ஆலியா பட் மங்கள்யான் வெற்றியை பார்த்து இனி மார்ஸ் சாக்லெட்டின் விலை குறையும் என்கிறாராம்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

நான் செவ்வாய் கிரகத்தில் நடக்கும் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவிக்கிறாராம்.

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

செவ்வாய் கிரகத்தின் பெயரை ராஜீவ் காந்தி லால் கிரஹ் என்று மாற்ற வேண்டும் என பிரியங்கா காந்தி வாத்ரா தெரிவிக்கிறாராம்.

சோனியா காந்தி

சோனியா காந்தி

செவ்வாய் கிரக வாசிகளை சிறுபான்மையினர் என அறிவிக்க வேண்டும் என்கிறாராம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

கெஜ்ரிவால்

கெஜ்ரிவால்

செவ்வாய் கிரகத்தை ஆக்கிரமித்தது மோடி அரசின் சட்டவிரோதமான செயல். நாங்கள் இதை கண்டித்து செவ்வாய் கிரகத்தில் போராட்டம் நடத்துவோம் என ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகிறாராம்.

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

செவ்வாய் கிரகம் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகும். அதை ராபர்ட் வாத்ராவிடம் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவிக்கிறாராம்.

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

செவ்வாய் கிரகத்தில் உத்தர பிரதேசத்தை விட அதிக அளவில் பலாத்காரங்கள் நடக்கிறது. அதை மீடியா கண்டுகொள்வது இல்லை என உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவிக்கிறாராம்.

English summary
Above are the funny tweets by people about Mangalyan entering Mars.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X