For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துரியன்... ரம்புட்டான்... மங்குஸ்தான்... குற்றாலத்தில் கொட்டிக்கிடக்கும் மருத்துவக் கனிகள்

Google Oneindia Tamil News

குற்றாலம்: குற்றாலத்தில் குளியல் முடித்த சுற்றுலா பயணிகள் ஊருக்கு புறப்படும் முன்பு செல்லும் இடம் பெரும்பாலும் பழக்கடையாகத்தான் இருக்கும்.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவதால் அரிய வகை பழங்கள் அனைத்தும் குற்றாலத்தில் கிடைக்கிறது.

குற்றாலத்தின் கடை வீதிகளில் வண்ண வண்ண நிறங்களில் துரியன்,ரம்புட்டான், மங்குஸ்தான் என வகை வகையான பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

கிலோ ரூ.500க்கு விற்கப்படும் துரியன் பழம் முதல் ரூ.5க்கு விற்கப்படும் வாழைப்பழம் வரை பல இடங்களில் விற்பனைக்காக வைத்துள்ளனர்.

மருத்துவ குணம் கொண்ட பழங்கள்

மருத்துவ குணம் கொண்ட பழங்கள்

குளிர்ச்சியை தரக்கூடிய மங்குஸ்தான் பழங்கள் அதிகம் மருத்துவ குணம் உடையது .ரம்புட்டான் பழங்களும் அதைப் போலத்தான். வைட்டமின் சி அதிகம் உள்ளாதல் விரும்பி வாங்கி செல்கின்றனர். மகப்பேறு உண்டாக்ககூடிய துரியன் பழங்கள் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறன.

துரியன் பழங்கள்

துரியன் பழங்கள்

துரியான் மற்றும் மங்குஸ்தான் பழங்கள் கடல் மட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடியவை ஆகும். மலட்டுத்தன்மையை போக்கும் தன்மை உடையதாக கருதப்படும் துரியன் பழங்களும் குற்றாலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

குவியும் பழங்கள்

குவியும் பழங்கள்

துரியன், மங்குஸ்தான், ரம்புட்டான், முட்டை பழம். ஸ்டார் புரூட், மா, பலா, வாழை, கொய்யா, பன்னீர் கொய்யா, சப்போட்டா, பேரிக்காய், வால்பேரி, பப்பாளி, பேரீச்சை, திராட்சை, ஆப்பிள், பிளம்ஸ்,

ரம்புட்டான் பழம்

ரம்புட்டான் பழம்

ஆரஞ்ச், மாதுளை என ஏராளமான பழ வகைகள் விற்பனைக்கு குவிந்துள்ளது. இதில் சுற்றுலா பயணிகளிடம் மங்குஸ்தான், ரம்புட்டான் பழங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

கண்ணைக் கவரும் நிறங்கள்

கண்ணைக் கவரும் நிறங்கள்

சிவப்பு நிறத்தில் அழகாய் கண்ணைப் பறிக்கும் இந்த பழங்கள் பார்க்கும் போதே வாங்கத்தூண்டும். மீண்டும் மீண்டும் சுவைக்கத்தூண்டும்.

மங்குஸ்தான்

மங்குஸ்தான்

குறிப்பாக குற்றாலம் தெற்கு மலை எஸ்டேட் பகுதியில் விளையும் மங்குஸ்தான் பழத்துக்கு அதிக கிராக்கி உள்ளது. கேரளா, ஊட்டியில் இருந்தும் மங்குஸ்தான் கொண்டு வரப்படுகிறது. இதன் சுவையும் அலாதியானது.

நாவல்கனி

நாவல்கனி

குற்றாலத்தில் ஆங்காங்கே நாவல்பழங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அதோடு பன்னீர் கொய்யா, நெல்லிக்காயும் விற்பனை செய்யப்படுகிறது.

மாம்பழங்கள்

மாம்பழங்கள்

குற்றாலத்தை அடுத்து மேலகரம் பகுதியில் இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுவைமிகுந்த மாம்பழங்களான பங்கனபள்ளி, இமாம்பசந்த், நீலம் உள்ளிட்ட சுவை மிகுந்த மாம்பழங்கள் இயற்கையாகவே பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அமோக விற்பனை

அமோக விற்பனை

மங்குஸ்தான் கிலோ ரூ.400 முதல் 500 வரை, ரம்புட்டான் ரூ.150&200, முட்டை பழம் ரூ.200 -250, பிளம்ஸ் ரூ.120-150, ஸ்டார் புரூட் ரூ.160-200, மாம்பழம் ரூ.50-150 வரை விற்கப்படுகிறது. சன்னதி பஜார், செங்கோட்டை சாலை, ஐந்தருவி, ஐந்தருவி சாலை என குற்றாலம் முழுவதும் பழ விற்பனை அமோகமாக நடக்கிறது. குற்றாலம் போய் குளித்துவிட்டு சத்தான பழங்களையும் வாங்கி வரலாமே

English summary
Courtallam is a scenic beauty of Tamil Nadu. There are many falls at courtallam where we can enjoy a lot. Inspite of falls, courtallam is also famous for some fruits which are called Rambutan, Mangosteen and Bablimas. These are yummy fruits and are very juicy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X