For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபை வன்முறையை கண்டித்து திமுக நாளை உண்ணா விரதம்.. ம.ம.கட்சி ஆதரவு

By Vazhmuni
Google Oneindia Tamil News

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டசபையில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பின் போது நடைபெற்ற ஜனநாயக விதிமீறல்களைக் கண்டித்து திமுக சார்பில் நாளை தமிழகம் முழுவதும் உண்ணாநிலைப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நம்பிக்கைக் கோரும் தீர்மானம் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில் நிறைவேற்றப்பட்டிருப்பது ஜனநாயக விரோதமானது.

Manithaneya Makkal Katchi supports Dmk Hunger strike

பேரவைத் தலைவர் சபையை ஒத்திவைத்துவிட்டு சபையை விட்டு வெளியே சென்றபிறகு சபைக் காவலர்களால் திமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுகவினர் தாக்கப்பட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர் அவர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்படும் வரை சபையில் இருந்திருக்க வேண்டும்.

தமிழக சட்டசபையில் நடைபெற்ற ஜனநாயக விதிமீறல்களைக் கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நாளை நடைபெற உள்ள உண்ணாநிலைப் போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. திமுக சார்பில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆதரவு தெரிவிப்பார்கள், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Manithaneya Makkal Katchi supports Dmk Hunger strike on Tomorrow. Manithaneya Makkal Katchi party Leader M. H. Jawahirullah statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X