For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி மேலாண்மை ஆணையம்... தமிழகத்தை திட்டமிட்டு பழிவாங்கும் மத்திய அரசு: மணியரசன்

காவிரி விவகாரத்தில் தமிழகத்தை திட்டமிட்டு பழிவாங்கும் மத்திய அரசு என்று மணியரசன் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : காவிரி விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு திட்டமிட்டு பழிவாங்குகிறது என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தாண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறக்க முடியாது.

 Maniyarasan questions Edappadi Palanisamy on Cauvery issue

எனவே நிலத்தடி நீர் பாசனத்தை ஊக்கப்படுத்த மின்சாரம் வழங்கப்படும் என்றும் மாற்றுப்பயிர் சாகுபடி செய்ய ஊக்கம் தரப்படும் என்றும் கடந்த 9-ந் தேதி சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மேலாண்மை ஆணையத்துக்கு மத்திய அரசு நியமிக்க வேண்டிய உறுப்பினர்களை கர்நாடகா நியமிக்காமல் இருப்பதும், ஆணைய கூட்டத்தை நடத்தாமல் இருப்பதும், திட்டமிட்டு தமிழகத்தை பழிவாங்குகிறது என்பதற்கு சான்றாகும். மத்திய அரசின் இந்த பழிவாங்கலுக்கு, துணை போகிறது தமிழக அரசு.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து அதில் வெற்றிபெற்று ஜூன் மாதத்துக்குரிய 9 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டிருந்தால் அதற்காக ஆளுங்கட்சி வெற்றி விழா கொண்டாடலாம்.

கர்நாடகத்தின் 4 அணைகளில் கபினி, ஹேமாவதி, ஹேரங்கி அணைகள் நிரம்பிவிட்டன. கிருஷ்ணராஜசாகரும் நிரம்ப போகிறது. எனவே மாத வாரியாக தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இதற்குமேல் கர்நாடகத்துக்கு தண்ணீர் தேவை என்ன இருக்கிறது? என கூறியுள்ளார்.

English summary
Central Government is making TN People fool says Maniyarasan. Tamil Desiya Periyakkam Leader Maniyarasan asks that, what are the Steps taken by Edappadi Palanisamy on Cauvery issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X