For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காரித் துப்பிய விஜயகாந்த்தை பாராட்டிய மனுஷ்யபுத்திரன்.. பின்னர் ஒரு வருத்தம்!

Google Oneindia Tamil News

சென்னை: மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த திமுக கூட்டத்தில் பேசிய எழுத்தாளரும், திமுக பிரமுகருமான மனுஷ்யபுத்திரன், சென்னையில் கேள்வி கேட்ட செய்தியாளரைக் காரி துப்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் செயலுக்கு பாராட்டு தெரிவித்துப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் பின்னர் தனது பேச்சுக்கு அவர் வருத்தம் தெரிவித்து பேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.

மதுரை, திருமங்கலத்தில் திமுக கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு மனுஷ்யபுத்திரன் சிறப்புரையாற்றினார். முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

மனுஷ்யபுத்திரன் பேசும்போது விஜயகாந்த் - செய்தியாளர் இடையிலான மோதல் குறித்தும் கருத்து தெரிவித்தார். அப்போது விஜயகாந்த்தின் செயலை நியாயப்படுத்தியும், செய்தியாளர்களை குற்றம் சாட்டியும் அவர் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

நாஞ்சில் - பார்ட் 2கட்சிக்கு ஒருத்தன் மாட்டறான்யா... இந்த தடவ ஏற்கனவே அடி வாங்கி நசுங்கிப்போன சொம்பு சிக்கியிருக்கு.

Posted by Anbalagan Veerappan on Saturday, January 2, 2016

மனுஷ்ய புத்திரன் பேசுகையில், டெய்லி கலைஞரைப் பார்த்து கேள்வி கேக்குறீல்ல.. மத்த கட்சித் தலைவர்கள் கிட்ட கேள்வி கேக்குறீல்ல.. டெய்லி வீட்டுக்கு முன்னாடி வந்து நிக்கிறீல்ல.. உங்க வீட்ல என்ன பிரச்சினைன்னை கேக்குறீல்ல.. ஏதாவது பிரச்சினைல மாட்டி விட முடியாதான்னு பார்த்தீல்ல.. தளபதி வரும்போது மைக்கை நீட்டினீல்ல.. போய் நில்லு போயஸ் கார்டன்ல.. அந்தம்மாவும் டெய்லி வெளில வருதுல்ல.. நாலரை வருஷமாச்சு.. எத்தனை தடவை மைக்கை நீட்டிருப்ப..

நாம துப்ப நினைச்சோம்.. ஒரு ஆள் செய்துட்டார்.. காரி துப்பத்தான செய்வாங்க.. பாராட்டனும் என்று அவர் விஜயகாந்த்தைப் பாராட்டிப் பேசும்போது மேடையில் இருந்த திமுகவினர் சத்தம் போடாமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

பத்திரிகையாளர்கள் கண்டனம்

Manushyaputhiran says sorry for his speech in DMK meet

மனுஷ்யபுத்திரனின் இந்தப் பேச்சுக்கு சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் உடனடியாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில் மனுஷ்யபுத்திரனின் பேச்சு கேவலமானது என்று அதன் தலைவர் அன்பழகன் கண்டித்திருந்தார்.

வருத்தம் தெரிவித்தார்

Manushyaputhiran says sorry for his speech in DMK meet

இந்த நிலையில், மேலிடத்திலிருந்து ஏதும் உத்தரவு வந்ததோ என்னவோ தெரியவில்லை.. மனுஷ்யபுத்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள போஸ்ட்..

நேற்று நான் திருமங்கலத்தில் பத்திரிகையாளர்கள் மேல் விஜயகாந்த் முன்வைத்த விமர்சனம் குறித்து நான் பேசியதை கண்டித்து பத்திரிகையாளர்கள் அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. நான் ஊடகங்களின் பாரபட்சமான அணுகுமுறையை சுட்டிக்காட்டுவதுதான் என் நோக்கமே தவிர எந்தவகையிலும் ஊடகங்களை அவமதிப்பது என் நோக்கமல்ல. மேலும் கருத்து சுதந்திரத்திற்காகவும் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து வாதாடியும் போராடியும் வருபவன் என்ற முறையிலும் நானே ஒரு ஊடகவியலாளன் என்ற முறையிலும் ஒரு போதும் ஊடகங்களை அவமதிக்க விரும்பமாட்டேன். என் கருத்து யாரையாவது அதற்காக வருந்துகிறேன் என்று கூறியிருந்தார்.

சேடபட்டி போட்ட குண்டு...

இதை விடுங்க.. மனுஷ்யபுத்திரன் போட்டுள்ள இன்னொரு போஸ்ட்டைப் பாருங்க...

"நேற்றிரவு திருமங்கலத்தில் நான் பேசத்தொடங்கும் முன்பு என் அருகில் இருந்த சேடபட்டி முத்தையா காதோடு காதாக " தம்பி இன்னைக்கு நீங்க பேசுற இந்த இடம் ரொம்ப ராசியான இடம்..நல்லபடியா பேசுங்க " என்றார். நான் ஆர்வமாகி "அப்படி என்னண்னே சிறப்பு?" என்றேன். "வைகோ இந்த இடத்தில் நடந்தகூட்டத்தில் பேசியதற்காகத்தான் பொடாவில் அரெஸ்ட் ஆனார்" என்றார் சிரிக்காமல்.

எனக்கு திக் என்று ஆகிவிட்டது.!

English summary
DMK writer Manushyaputhiran has said sorry for his controversial comments on journalists in DMK meet held near Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X