For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திரை உலகில் பலருக்கு சுயமரியாதையே இல்லை, வெட்கக்கேடு: தயாநிதி அழகிரி விளாசல்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ் திரை உலகில் உள்ள பலருக்கு சுயமரியாதை என்பதே இல்லாதது வெட்கக்கேடானது என்று ஜெயலலிதாவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்த திரை உலகினர் பற்றி தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழ் திரை உலகினர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று உண்ணாவிரதம் இருந்தனர். இந்த போராட்டத்தில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என்று பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இது குறித்து தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி ட்விட்டரில் கூறுகையில்,

வெட்கம்

தமிழ் திரை உலகில் பலருக்கு சுயமரியாதை என்பதே இல்லை. வெட்கக் கேடு.

தலைவா

இதை எல்லாம் செய்யும் முன்பு படங்கள் மீது விதிக்கப்பட்ட வரி, தலைவா, விஷ்வரூபம் பட பிரச்சனை எல்லாம் திரை உலகினர் நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவா அல்லது நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தா திரை உலகம் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் இருக்கிறது.

பயம்

பயம்! அது மட்டும் அண்டா அண்டாவா இருக்கு...

வழக்கு

சொத்துக்குவிப்பு வழக்கோ, 2ஜி ஊழல் வழக்கோ. தீர்ப்பு அளிக்கப்பட்டால் வழக்கு முடிந்துவிட்டது. அதை மாற்ற முடியாது. நீதியை மதியுங்கள் என்று தயாநிதி அழகிரி தெரிவித்துள்ளார்.

English summary
Dayanidhi Azhagiri tweeted that, 'SELF RESPECT ! I think there are a lot of people in the tamil cine industry who lack that... Shame on us...'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X