• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நினைத்து பார்க்க முடியாத மாபாதக குற்றங்களில் சிக்கும் பெண்கள்.. எங்கே செல்கிறது தமிழகம்?

By Veera Kumar
|

சென்னை: தமிழகத்துக்கு எத்தனையோ பெண்கள் பெருமை சேர்த்துக் கொண்டுள்ள நிலையில், சமீப காலமாக வெளிவரும் செய்திகள் பெண்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இல்லை.

சமீப காலத்தில் குற்றச்செயல் செய்திகளில் தலைப்பு செய்திகளாக இடம் பிடித்திருப்பது பெண்களின் பெயர் தான் என்பது மிகப் பெரிய ஷாக். பெண் அதிகாரிகள் தவறு செய்யமாட்டார்கள் என்ற எண்ணத்தை இந்த சம்பவங்கள் தவிடுபொடியாக்கி வருகின்றன.

யோசிக்கவே முடியாத அளவுக்கு குற்றச்செயல்களில் அவர்களின் பெயர்கள் அடிபட்டு வருவது வேதனையே.

நிர்மலா தேவி

நிர்மலா தேவி

சமீப காலத்தில் இப்படியான குற்றச்செயல்களில் சிக்கி மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய முதல் நபர் நிர்மலா தேவி. அருப்புக்கோட்டையை சேர்ந்த கல்லூரி பேராசிரியையான இவர், மாணவிகளை உயர் அதிகாரிகளிடம் படுக்கையை பகிர்ந்து கொள்ள வற்புறுத்தி அவர்களுக்கு ஆசை காட்டி உள்ளார் என்ற தகவல் அவரது பேச்சு அடங்கிய ஆடியோ வெளியானதன் மூலம் அம்பலமானது. தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியது. இதேபோலத்தான் கோவை விடுதி வார்டன் புனிதாவும், அங்கு தங்கியிருந்தவர்களை பாலியல் உறவுக்கு தூண்டியுள்ளாரா். கல்லூரி மாணவிகளை அனுப்பும் பெற்றோர் ஒவ்வொருவரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொள்ள இதுபோன்ற சம்பவங்கள், காரணமாகின.

அறநிலையத்துறை அதிகாரி கவிதா

அறநிலையத்துறை அதிகாரி கவிதா

இதன் பிறகு சமீபத்தில் சிக்கி உள்ள மற்றொரு பெண் பிரபலம் கவிதா. இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் பதவியில் இருந்த இவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்தபடி இருக்கும் இவர், சிலை மோசடியில் ஈடுபட்டார் என்பதை ஏற்க பொதுமக்களின் மனதே கூட தயங்குகிறது. ஆனால், உறுதியான ஆதாரம் உள்ளதாக கூறுகிறார் பொன்.மாணிக்கவேல்.

சம கால சோக வரலாறு

சம கால சோக வரலாறு

மாணவிகளை ஆசிரியையே பாலியலுக்கு தூண்டுவது, பெண் அதிகாரி ஒருவரே சிலை செய்ததில் மோசடியில் ஈடுபட்டது சமகால தமிழக வரலாற்றில் காணக்கிடைக்காத சோக நிகழ்வுகள். அத்தோடு முடியவில்லை இந்த பட்டியல். அண்ணா பல்கலை விடைத்தாள் முறைகேடு தொடர்பாக உமா என்ற பேராசிரியை இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திறமையாளர்கள் நிலை

திறமையாளர்கள் நிலை

10 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு மறு திருத்தத்திற்கு வரும் பேப்பர்களுக்கு, கூடுதல் மதிப்பெண் அளிப்பதே இந்த மோசடியின் பின்புலம். எத்தனையோ ஏழை எளிய மாணவர்கள் இதுபோன்ற மோசடிகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். நன்கு படித்து கூட பணம் கொடுப்பவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதால் திறமையானவர்கள் எந்த அளவுக்கு இந்த சமூகத்தில் புறந்தள்ளப்பட்டிருப்பார்கள் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

எத்தனை துரோகங்கள்

எத்தனை துரோகங்கள்

ஆசிரியர்கள் மற்றொரு பெற்றோர்கள். ஆனால் நிர்மலா தேவி என்ற பேராசிரியை, மாணவிகளை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார். உமாவோ பணத்தை வாங்கிக் கொண்டு நன்கு படிக்கும் மாணவர்களுக்கு பச்சை துரோகம் செய்துள்ளார். இந்த மாபாதக செயல்களையெல்லாம் பின்னணியில் இருப்பது பெண் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது பெரும் சோகம். எப்போது இந்த பெண்கள் தடம் ஆரம்பித்தனர்? இதன் பின்னணியில் உள்ள உளவியல் என்ன? உலகமயமாக்கல் பொருளாதார தேவைகள், அறம்சார்ந்த சிந்தனைகளை விழுங்கிவிட்டனவா? இவையெல்லாவற்றையும், ஆலோசிக்கப்பட வேண்டிய அவசர தேவை இப்போது எழுந்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
In the recent days many women caught on red hand in Tamilnadu while doing criminal activities.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more