For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலாவை சந்தித்து ஆசி பெற்ற தங்கமகன் மாரியப்பன்... ஜெ. படம் முன் பதக்கம் வைத்து வணங்கினார்

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்து ஆசி பெற்றார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : பிரேசிலில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு அப்போதய முதல்வர் ஜெயலலிதா, ரூ. 2 கோடி பரிசு அறிவித்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ம் தேதி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து மாரியப்பன் பரிசு பணத்தை பெறுவது தள்ளிப்போனது.

Mariappan Thangavelu meets Sasikala

இந்த நிலையில் நேற்று போயஸ்கார்டனுக்கு தனது பயிற்சியாளருடன் சென்ற மாரியப்பன் சசிகலாவிடம் தனது பதக்கத்தை காண்பித்து ஆசி பெற்றார். மேலும் அவர் இன்று தலைமை செயலகம் சென்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார். அவர் ஜெயலலிதா அறிவித்த ரூ. 2 கோடிக்கான காசோலையை வணங்கினார்.

பிரேசில் நாட்டின், ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாரா ஓலிம்பிக்ஸ் 2016 போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. த. மாரியப்பன் அவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடுதமிழக அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று10.9.2016 அன்று அறிவித்தார்கள்.

ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பின்படி, பாரா ஓலிம்பிக்ஸ் 2016 போட்டியில் உயரம் தாண்டுதலில்தங்கப் பதக்கம் வென்ற திரு. த. மாரியப்பன் அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையான2 கோடி ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் இன்று வழங்கி வாழ்த்தினார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசோலையை பெற்றுக்கொண்ட மாரியப்பன், மீண்டும் போயஸ்கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து ஆசி பெற்றார். ஜெயலலிதாவின் படத்தின் முன்பு காசோலையை வைத்து வணங்கினார்.

English summary
Mariyappan Thangavelu, who won the gold medal in Rio Paralympics met Sasikala at Poes garden in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X