For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவசர சட்டம், ஆர்வலர்கள் கோரிக்கை நிராகரிப்பு.. இரவிலும் தொடருகிறது மெரினா போராட்டம்

மெரினாவில் போராட்டம் தொடருகிறது. இன்று 7வது நாளில் போராட்டம் அடியெடுத்து வைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட இன்று போராட்டக்காரர்கள் கூட்டம் அதிகமாகவும் இருந்தது. இதனால் மெரினா நிரம்பி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் 7வது நாளை எட்டியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சென்னை மெரினாவில் கடந்த திங்கட் கிழமை முதல் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து டெல்லி சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு நடத்த அவசரச்சட்டம் இயற்றும் நடவடிக்கைகளில் இறங்கினார்.

Marina Jallikattu protest continues on the 7th day

சனிக்கிழமை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்ட நிலையிலும், மாணவர்கள், இளைஞர்கள் மெரினாவில் போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் தொடர்ந்தனர். இதனிடையே நேற்று இரவு ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினர் அளித்த பேட்டியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை முடித்துக்கொள்ளலாம் என கேட்டுக்கொண்டனர்.

இருப்பினும் மெரினாவில் போராட்டம் தொடருகிறது. இன்று 7வது நாளில் போராட்டம் அடியெடுத்து வைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட இன்று போராட்டக்காரர்கள் கூட்டம் அதிகமாகவும் இருந்தது. இதனால் மெரினா நிரம்பி வழிகிறது.

நிரந்தர சட்டம் வரும்வரையில் போராட்டத்தை கைவிட மாட்டோம் என மெரினா இளைஞர்கள் உறுதியாக கூறிவிட்டனர். இதனால் இன்று நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் அவசர சட்டத்தை நிரந்தரமாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்புடகிறது.

English summary
Marina Jallikattu protest continues on the 7th day, even after gvt brings out ordinance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X