For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தடியடியால் மக்களுக்கு ஆர்வம் இல்லை.. களையிழந்தது குடியரசு தின விழா.. வெறிச்சோடியது மெரினா

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதால் மெரினா வெறிச்சோடி கிடந்தது.

இன்று நாட்டின் 68வது குடியரசு தின விழா சென்னை மெரினா பகுதியில் நடைபெற்றது. பன்னீர்செல்வம் தேசிய கொடியேற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதையடுத்து மாமவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை மேடையில் அமர்ந்தபடி பன்னீர் செல்வம் பார்வையிட்டார்.

Marina: Lesser number of public gathered to witness RepublicDay parade

வழக்கமாக இந்த நிகழ்ச்சிகளை நேரில் பார்க்க அதிகப்படியான பொதுமக்கள் வருகை தருவார்கள். இம்முறை பொதுமக்கள் அதிகம் வரவில்லை. மெரினா பகுதி வெறிச்சோடி கிடந்தது. ஆனால் போலீசார் அதிகப்படியாக குவிக்கப்பட்டிருந்தனர். மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்கள், பெண்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இதனால் ஏற்பட்ட வன்முறையால் சென்னை போர்க்களமானது.

தற்போது மெரினாவில்தான் குடியரசு தின விழா நடைபெறுவதால் அச்சத்தாலும், கோபத்தாலும் குடியரசு தின விழாவுக்கு பல பொதுமக்கள் போகவில்லை. மீனவர்களும் செல்லவில்லை. இதனால் மெரினாவில் நடைபெற்ற குடியரசு தின விழா களையிழந்து காணப்பட்டது.

English summary
Lesser number of public gathered to witness RepublicDay parade celebrations along Marina than previous years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X