For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் எதிரொலி- மெரினாவில் போலீஸ் தடை

ஜாக்டோ - ஜியோ போராட்டம் நடைபெறுவதையொட்டி சென்னை மெரினாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜாக்டோ ஜியோ தலைமை செயலகம் முற்றுகை போராட்டம்- வீடியோ

    சென்னை : ஜாக்டோ - ஜியோ அரசு ஊழியர்கள் அமைப்பின் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால், சென்னை மெரினாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினா சர்வீஸ் சாலையிலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    7வது ஊதியக் குழு முரண்பாடுகளை நீக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற ஐந்து அம்க்ச கோரிக்கைகளை வலியுறுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ இன்று கோட்டை முற்றுகைப் போராட்டத்தை அறிவித்து இருந்தது.

     Marina Road Blocked due to Jacto Geo Protest

    இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல ஊழியர்கள் நேற்று இரவு முதல் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று காலை முதல் சென்னை வாலாஜா சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலையில் கோட்டையை நோக்கி போராட்டத்தை துவங்கினர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

     Marina Road Blocked due to Jacto Geo Protest

    இதனால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து வருகின்றனர்.

     Marina Road Blocked due to Jacto Geo Protest

    முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கோட்டைக்கு வரும் மெரினா சாலையை போராட்டக்காரர்கள் தடுக்கக்கூடும் என்பதால் அங்கு தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், மெரினாவிற்கு செல்லவும், மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    Marina Road Blocked due to Jacto Geo Protest. Jacto Geo association members are on to Secretariat Siege Protest at Chennai and more than 1000 Govt Employees arrested at chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X