For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ் மொழியை சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக அறிவிப்பதில் ஒரு தவறும் இல்லை. இதுதொடர்பான வழக்கறிஞர்களின் கோரிக்கையில் எந்தத் தவறும் இல்லை. முற்றிலும் நியாயமான கோரிக்கை அது என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

Markandeya Katju justifies Chennai lawyers' damand of making Tamil as official language of Madras HC

இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியின்போது,

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டுவர வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் போராட்டம் நியாயமானது தான்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்தியில் வாதாட அனுமதி உண்டு. வட மாநிலங்களில் இந்தியில்தான் வாதாடுகிறார்கள். எனவே தமிழில் வாதாட சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் கோருவதில் முழு நியாயமும் உள்ளது.

குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்று இதை அறிவிக்கலாம். மொழிச் சட்டம் 1963 பிரிவு 7ன் படி வழக்கின் தீர்ப்பை மாநில மொழியில் எழுதலாம். அத்துடன் தீர்ப்பை ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்க வேண்டும்.

தமிழ் போன்ற உயரிய மொழியில் வழக்காடுவது பலர் தரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழை வழக்காடும் மொழியாக அறிவிப்பது எந்த தவறும் இல்லை. இதற்கு அரசியலமைப்பு சட்டத்திலும் இடம் உண்டு என்றார் அவர்.

English summary
Former SC Judge Markandeya Katju has justified the Chennai lawyers' damand of making Tamil as official language of Madras HC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X