For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விண்வெளி ஆச்சர்யம்.. பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய்.. 15 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அதிசயம்!

செவ்வாய் கிரகம் இன்று பூமிக்கு மிகவும் அருகில் வர இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: செவ்வாய் கிரகம் இன்று பூமிக்கு மிகவும் அருகில் வர இருக்கிறது. இதனால் செவ்வாய் கிரகத்தை மிகவும் எளிதாக தெளிவாக பார்க்க முடியும்.

நிலவு குறித்து ஆராய்ச்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வந்தது. ஆனால் நிலவில் பெரிய சுவாரசியம் இல்லை என்பதால் தற்போது செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாசா, இஸ்ரோ, ப்ளூ ஒரிஜின், ஸ்பேஸ் எக்ஸ் எல்லோரும் நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது பூமிக்கு மிக அருகில் செவ்வாய் காட்சி அளிக்க இருக்கிறது.

தூரம்

தூரம்

பூமியில் இருந்து குறைந்தபட்சம் 5 கோடியே 76 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் செவ்வாய் கிரகம் இருக்க போகிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகில் வந்து கொண்டே இருந்தது. இந்த வாரம் முழுக்க, செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகில் காட்சி அளிக்கும்.

மிகவும் பெரிய புயல்

மிகவும் பெரிய புயல்

இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் தற்போது பெரிய புயல் வீசி வருகிறது. இதுவரை செவ்வாய் கிரக வரலாற்றில் வீசாத பெரிய புயல் இது என்று கூறப்படுகிறது. செவ்வாயின் முக்கால் பகுதியை இந்த புயல் மொத்தமாக ஆக்கிரமித்துள்ளது. இந்த புயல் இன்னும் சில நாட்களுக்கு செவ்வாய் கிரகத்தை அப்படியே சுற்றி சுற்றி வரும் என்று கூறப்படுகிறது.

வெளிச்சம்

வெளிச்சம்

இதனால் செவ்வாய் மிகவும் வெளிச்சமாக இருக்கும். செவ்வாயில் உள்ள தூசுகள்தான், சூரிய ஒளியை பிரதிபலிக்கும். இதனால்தான் தற்போது செவ்வாய் நம் கண்ணுக்கு தெரிகிறது. இதனால், தற்போது மிகவும் வெளிச்சமாக செவ்வாய் மனிதர்களின் கண்களுக்கு தெரியும் என்று, நாசா தெரிவித்து இருக்கிறது.

வெறும் கண்ணால் பார்க்கலாம்

வெறும் கண்ணால் பார்க்கலாம்

இதை அப்படியே வெறும் கண்களால் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படாது. இனி இதே போன்ற செவ்வாய் பூமிக்கு அருகில் 2020-ம் ஆண்டு வரும். இதற்கு முன்பு 15 ஆண்டுகளுக்கு முன்பு 2003ல் செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து 5 கோடியே 30 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் வந்தது. அதன்பின் இப்போதுதான் பூமிக்கு அருகில் வருகிறது.

English summary
Mars will come close to Earth by today, Which the closest approach in last 15 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X