For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதிச்சநல்லூரில் பிடிமண்- நெல்லையில் நாளை தமிழர் உரிமை மாநாடு!

தமிழர் உரிமை மற்றும் வரலாற்றை பறைசாற்ற நெல்லையில் நாளை இந்திய மாணவர்சங்கம்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பாக பிரமாண்ட மாநா

By Suganthi
Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லையில் நாளை தமிழர் உரிமை மாநாடு நடக்கவுள்ளது. இம் மாநாட்டின் துவக்கமாக ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொல்லியல் மேட்டிலிருந்து பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லையில் தென்மண்டல தமிழர் உரிமை மாநாட்டை இந்திய மாணவர்சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன. இதன் தொடக்கமாக தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொல்லியல் மேட்டிலிருந்து பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Marxist Party youth wing and writers wing organizing Tamilar rights meeting

இதற்கு தமுஎகசவின் மாநில தலைவர் ச.தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். இந்தித்திணிப்புக்கு எதிராகவும் வரலாற்று உரிமையை நிலை நிறுத்தவும் இந்த மாநாட்டை நடத்துவதாக ச.தமிழ்செல்வன் கூறினார்.

இதனையடுத்து பிடிமண்ணை எடுத்துக்கொடுத்த வரலாற்று அறிஞர் கே.ஏ.மணிக்குமார், மொகஞ்சோதரா, ஹரப்பா அகழாய்வுகளுக்கு முன்னால் ஆதிச்சநல்லூரில்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக அகழாய்வு நடைபெற்றது என கூறினார். அந்த அகழாய்வில் ஆதிசநல்லூரில் முதுமக்கள் தாழியும் இரும்பும் செம்பும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகையால் மீண்டும் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெற வேண்டும் என்றார்.

ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட பிடிமண்ணை நாளை நடக்கும் மாநாட்டில் தமிழறிஞர் தொ.பரமசிவன் பெற்றுக்கொள்கிறார். மாநாட்டில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து இந்திய மாணவர்சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வர்.

English summary
In Nellai Tamilar rights meeting will be held on behalf of SFI, DFYI wings. The grand meeting started with taking soil from Adhichanallur yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X