For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமேஸ்வரம் வானில்.. சூரியனைச் சுற்றி ஒரு கருப்பு வட்டம்.. அது என்ன.. வாய் பிளந்த மக்கள்!

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: அடிக்கடி வானில் அதிசய நிகழ்வுகள் நடப்பது வழக்கம். சமீபத்தில்தான் வால் நட்சத்திரம் ஒன்று வானில் பதினைந்து நாட்களுக்கும் மேல் தெரிந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று ராமேஸ்வரம் பகுதியில் ஒரு அதிசய நிகழ்வு ஏற்பட்டது. திடீரென சூரியனை சுற்றி கருமை நிறத்தில் ஒளிவட்டம் தோன்றியது. இது மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

நாட்டில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து கொண்டு இருக்கிறது. வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு இடையே ஏற்பாடும் வானிலை மாற்றங்கள் ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு.. ராணிப்பேட்டை, விருதுநகர், திருவள்ளூர், தேனியில் கிடுகிடுமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு.. ராணிப்பேட்டை, விருதுநகர், திருவள்ளூர், தேனியில் கிடுகிடு

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

இதில் ஒன்றாக இன்று சூரியனை சுற்றி ஏற்பட்ட கருமை நிறத்திலான ஒளி வட்டம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. சூரியனைச் சுற்றி அந்த ஒளிவட்டம் கருமை நிறத்தில் இருந்தது. இந்த ஒளிவட்டத்தை ராமேஸ்வரம் மட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்ட மக்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

40 நிமிடம் நீடித்தது

40 நிமிடம் நீடித்தது

ஏன் இந்த ஒளிவட்டம் ஏற்பட்டது என்று தெரியாமல் மக்கள் குழம்பினர். இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை கைவிடாமல், தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். சுமார் 40 நிமிடங்கள் ஒளிவட்டம் வானில் தெரிந்தது.

நீர்த்திவலைகள்

நீர்த்திவலைகள்

முன்பும் சில முறை இதுபோன்று வானில் ஏற்பட்டுள்ளது. பூமியில் இருந்து அதிக அளவில் வெப்பக்காற்று மேல் எழும். அப்போது நீர்த்திவலைகள் மீது சூரிய ஒளிக்கதிர்கள்படும். இது 22 டிகிரி கோணத்தில் படும்போது இதுபோன்ற ஒளி விலகல் ஏற்படலாம் என்று ஏற்கனவே வானியல் வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். அதிக குளிர் இருக்கும் நாடுகளில்தான் இதுபோன்ற ஒளிவட்டம் தென்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், இன்று ராமேஸ்வரத்தில் வெயில் அதிகமாகவே இருந்துள்ளது.

பூமிக்கு பாதிப்பு இல்லை

பூமிக்கு பாதிப்பு இல்லை

சமீபத்தில் வானில் தெரிந்த வால் நட்சத்திரம் பாதி நீராலும், பாதி தூசுனாலும் ஆனது என்று கூறப்பட்டது. 13 மில்லியன் ஒலிம்பிக் நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீர் அளவிற்கு இதிலும் தண்ணீர் இருக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. பூமியில் இருந்து 70 மில்லியன் மைல் தொலைவில் இது காணப்பட்டது. ஒரு வினாடிக்கு 40 மைல் தொலைவிற்கு பயணிக்கும், இந்த நட்சத்திரத்தால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று சூரியனைச் சுற்றி கருமை நிறத்தில் ஒளிவட்டம் தென்பட்டது.

English summary
Massive Sun halo has seen in Rameswaram video goes viral
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X