• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காவி மண்டை.. வெறுப்பு பேச்சு.. மாஸ்டர் சிங்கிள் டிராக்கில் அதை கவனீச்சிங்களா? பஞ்சாயத்து ஸ்டார்ட்

|
  Master - Kutti Story | Lokesh Kanagaraj | Anirudh Ravichandran | Thalapathy Vijay

  சென்னை: பிகில் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விஜய்க்கு வில்லனாக முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். ஷாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

  இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்காளக நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் ஷுட்டிங் நடைபெற்றது. இந்த ஷுட்டிங் கடந்த 10 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

  இந்நிலையில் மாஸ்டர் படம் குறித்த முக்கிய அறிவிப்பு கடந்த செவ்வாய்க்கிழமை வெளியானது. அதாவது மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் காதலர் தினமான இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனை சோனி மியூஸிக் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன்படி பாட்டு வெளியாகியுள்ளது. ஒரு குட்டி கதை என தொடங்கும் அப்பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார்.

  வெறுப்பை பரப்பும் நபராக இருக்காதீர்கள்

  வெறுப்பை பரப்பும் நபராக இருக்காதீர்கள்

  "Dont be the person spreading hatred" என்று பாடலில் ஒரு வரி வருகிறது. அப்போது மேடையில் ஒருவர் அரக்கன் போல கொம்பு முளைத்த ஒருவர் கையை உயர்த்தி பேசுவது போலவும், நூற்றுக்கணக்கானோர் மேடையின் முன்னால் உட்கார்ந்து இருப்பதை போலவும் புகைப்படத்துடன் ஒரு செய்தி செய்தித்தாளில் வந்தது போல காட்சி வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய அம்சம், மேடையில் பேசுபவர் வேட்டி, சட்டை அணிந்திருந்தாலும், அவரது தலை முழுக்க காவியாக காணப்படுகிறது. எதிரே அமர்ந்திருப்போர் முகங்களும் காவி வண்ணத்தில் காண்பிக்கப்பட்டுள்ளன.

  காவி வண்ணம்

  காவி வண்ணம்

  வெறுப்பு பேச்சு என கூறி, விஜய் பாட்டில் காவி வண்ணம் வருகிறது என்றால் கேட்கவா செய்ய வேண்டும். சோஷியல் மீடியாவில் வலதுசாரிகள் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர். ஏற்கனவே மெர்சல் திரைப்படத்தில், கோவில் வேண்டாம், இந்த ஊரில் மருத்துவமனை கட்டுவதுதான் அவசியம் என விஜய் பேசும் வசனம் வந்தது. அப்போதுதான், பாஜகவின் எச்.ராஜா ஆவேசமானார். விஜயை ஜோசப் விஜய் என குறிப்பிட்டு டுவீட் செய்தார்.

  மெர்சல் பஞ்சாயத்து

  மெர்சல் பஞ்சாயத்து

  பாஜகவினர் கொடுத்த இலவச விளம்பரத்தாலும், மெர்சல் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இப்போது மாஸ்டர் படத்துக்கு ஆரம்பத்திலிருந்தே பஞ்சாயத்து செய்து வருகிறது பாஜக. நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் இருக்கும் இடத்தில் மாஸ்டர் படத்தை சூட் செய்ய கூடாது என போராட்டம் நடத்தினர் பாஜகவினர். ஆனால் விஜய் ரசிகர்கள் சாரை சாரையாக குவிந்ததால், போராட்டத்தை விட்டுவிட்டு எஸ் ஆகிவிட்டனர்.

  விஜய் செல்பி

  விஜய் செல்பி

  இதையடுத்து, விஜய் தனது ரசிகர்கள் முன்னிலையில் வேன் மற்றும் பஸ்சில் ஏறி கையசைத்து மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் செல்பி எடுத்து அதை டுவிட்டரில் போட அது தேசிய அளவிலும், உலக அளவிலும் டிரெண்ட்டானது. முன்னதாக, விஜய் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையின் பின்னணியிலும் பாஜக இருப்பதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில்தான், காவி தலையுடன் கூடியவர் வெறுப்பு பிரச்சாரம் செய்வது போல மாஸ்டர் சிங்கிள் டிராக்கில் வெளியாகியுள்ள காட்சி பரபரப்பை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.

   
   
   
  English summary
  Master - Kutti Story Lyric video has saffron colored heads while the song says Dont be the person spreading hatred.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X