For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தடையை மீறி மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம்... போலீஸ் அராஜகம்! - வீடியோ

சென்னை மெரினா கடற்கரையில் தடையை மீறி நடத்தப்பட்ட முள்லிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: மெரினா கடற்கரையில் ஈழ இன அழிப்புப் போரில் கொல்லப்பட்டவர்களுக்காக நினைவேந்தல் கூட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பபரப்பு ஏற்பட்டது.

ஈழ இன அழிப்புப் போரின் உச்சமாக மே மாதம் 17ஆம் தேதி 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதி போரில் ஈழத்தில் லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அதன் நினைவாக ஒவ்வொரு மே மாதம் 17ஆம் தேதி நினைவேந்தல்கூட்டத்தை மே 17 இயக்கத்தினர் கடைபிடித்து வருகின்றனர். ஜெயலலலிதா ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் கூட இந்த நினைவேந்தல் கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

 May 17 movement youngsters arrested in Marina beach

இந்தாண்டு, 8ஆவது ஆண்டு நினைவேந்தல் கூட்டத்தை நடத்த மே 17 இயக்கத்தினரும் தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் தமிழக அரசு நினைவேந்தல் கூட்டத்துக்கு அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து நேற்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தடையை மீறி நினைவேந்தல் கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். கருப்பு சட்டை போட்ட அனைவரும் போராட்டக்காரகள் என்ற நினைப்பில் போலீஸ்காரர்கள் கருப்பு சட்டை அணிந்திருந்த வட மாநிலத்தவரைக் கூட கைது செய்தனர்.

கடந்த 7 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது கிடையாது. மத்திய அரசால் இயக்கப்படுகிறது என பலராலும் விமர்ச்சிகப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசால்தான் நினைவேந்தல் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதும் கைது செய்யப்பட்டதும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
May 17 organization used to conduct memorial meeting on every May 17 in Marina beach for Ezha Tamilars who died in 2009 war in Srilanka. This year state government did not give permission. Even though they conducted meeting and they got arrested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X