For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல்... முதலிடம் பிடித்த சென்னை மாணவிக்கு டெல்லி எய்ம்ஸில் இடம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி கீர்த்தனாவுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இடம் கிடைத்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: எம்பிபிஎஸ் , பிடிஎஸ் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி கீர்த்தனாவுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர இடம் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 3,050 எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 476 இடங்கள் போக, மாநில அரசுக்கு 2,574 இடங்கள் உள்ளன. அது போல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,200 எம்பிபிஎஸ் இடங்களில் 689 இடங்களும் சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில் 65 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன.

MBBS, BDS ranking list : Chennai student gets admission in AIIMS

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் வெளியீடு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடந்தது. அரசு இடங்களுக்கு 25,417 பேருக்கும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 18,915 பேருக்கு மான தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

இதில் காசி- கவிதாலட்சுமி தம்பதியின் மகள் கீர்த்தனா முதலிடம் பெற்றார். அவர் டெல்லி எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் 31-வது இடம் பெற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு எய்ம்ஸில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.

English summary
MBBS and BDS Ranking list released by Health department minister Vijayabaskar. Chennai student Keerthana who gets first rank gets admission in Delhi AIIMS.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X