For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருத்துவ படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு.. சென்னை மாணவி கீர்த்தனா முதலிடம்!

மருத்துவ படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மாணவி கீர்த்தனா முதலிடம் பிடித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மாணவி கீர்த்தனா முதலிடம் பிடித்துள்ளார்.

நாடு முழுவதும் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள், சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் மற்றும் சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவ கல்லூரியிலும் வழங்கப்பட்டது.

ரேங்க் லிஸ்ட் வெளியீடு

ரேங்க் லிஸ்ட் வெளியீடு

இதற்காக 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்து சேர்ந்தன. இந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு அரசு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

அமைச்சர் வெளியிட்டார்

அமைச்சர் வெளியிட்டார்

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த பட்டியலை வெளியிட்டார்.இதில் சென்னை மாணவி கீர்த்தனா முதலிடம் பெற்றுள்ளார்.

கீர்த்தனா முதலிடம்

கீர்த்தனா முதலிடம்

கீர்த்தனா நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்தவர் ஆவார். அவர் 676 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து தருமபுரி மாணவர் ராஜ்செந்தூர் அபிஷேக் 2வது இடமும், சென்னை மாணவர் பிரவீன் 3வது இடமும் பிடித்துள்ளனர்.

ஜூலை 1- 10

ஜூலை 1- 10

மருத்துவப்படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு நீட் தேர்வு மூலம் 40 சதவீதம் மாணவ மாணவிகளே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
MBBS rank list has been released in Chennai. Minister Vijaya baskar has released it. Chennai Student Keerthana got first rank in the list.She got 676 Marks in NEET exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X